முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

டச் ஸ்கிரீன் எப்படி வந்தது தெரியுமா?

Image Unavailable

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்.அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது. பின்னர் வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன்தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்