எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Sunday, March 15, 2026 to Saturday, March 21, 2026
மேஷம்
இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நல்லது, கெட்டது இரண்டும் கலந்த வாரம். நினைக்கிறதும் நடக்கும் நினைக்காமல் இருக்கக்கூடிய சில விஷயங்களும் நடக்கும். எதிர்பார்ப்புகள் அப்படிங்கறது உங்களுக்கு எதுவுமே தேவையில்லை. காலப்போக்கில் இந்த ஒன்பது கிரகங்களுடைய ஸ்திர தன்மையினுடைய பலன் இந்த வாரத்தில் உண்டு. மனநிம்மதி கிடைக்கும். பண விஷயத்தில் எந்த ஒரு கஷ்டம் நட்டமோ இல்லை. வண்டி வாகனங்கள் ஓட்டும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக ஓட்டவேண்டும். குடும்ப விஷயமாக சந்தோஷமான விஷயங்களும் நிறைய நடக்கும்.
ரிஷபம்
இந்த வாரம் சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் ஆரம்பித்து அஸ்வினி நட்சத்திரம் வரை இருக்கக்கூடிய காரணத்தினால் அதாவது சந்திரன் 9, 10, 11 முறையே 12 - ஆகமொத்தம் கற்பனை திறன் அதிகமாக இருக்கும். கனவுகள் நிறைய வந்து தொல்லை கொடுக்கும். நீங்க கடன் வாங்கி இருந்தால் அந்த கடனை அடைக்க கூடிய விஷயங்கள் உங்களுக்கு நடக்கும். புதியதாக கடன் வாங்க வேண்டாம் பண விஷயங்களில் சீராக இருக்கும். குடும்ப சண்டை சச்சரவுகள் சில நேரங்களில் வருவதற்கு வாய்ப்பு இருக்கு, குறிப்பாக புதன் வியாழன்ல ரொம்ப ஜாக்கிரதையா இருக்கும்.
மிதுனம்
இந்த வாரம் பணப்பழக்கம் அதிகரிக்கும். சில விஷயங்கள்ல எதிர்பார்ப்புகள் உங்கள ரொம்ப பாடாய்ப்படுத்தும். ஆசைகள் கொஞ்சம் அதிகமாக வரும். கடன் வாங்கி ஏதாவது செய்யலாம் இல்ல கையில இருக்கிற காசு செலவு பண்ணலாம் அப்படிங்கிற மாதிரி எல்லாம் உங்களுக்கு எண்ணங்கள் தோன்றும். புதியதாக பொருள் வாங்கக்கூடிய விஷயங்கள்ல மனசு போகும். அதெல்லாம் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. வேகம் வேண்டாம். நிதானம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நடுவயது பெண்களுக்கு மிகவும் நல்ல வாரம். குடும்பத்தில் மிகவும் அன்னியோன்யம் இருக்கும். கணவன், மனைவி, குழந்தை எல்லாருக்கும் அன்பு பாசம் குடும்பத்தில் ஒரு குதூகலம். எதை செய்தாலும் அது நல்லதாகவே நடக்கும். நல்லதாகவே முடியும். கையில் இருக்கிற சேமிப்புக்கள் மேலும் வளரும். பண வரவு உண்டு. வெளியூர் பிரயாணங்கள் உண்டு.
மகரம்
இந்த வாரம் குடும்பம் சந்தோஷமாக இருக்கக்கூடிய வாரம். நீங்கள் செய்யக்கூடிய அனைத்தும் மிகவும் உதவிகரமாக இருக்கும். வேறு விஷயங்களை எதிர்பார்த்த படி நல்ல முயற்சிகள் பலன் கொடுக்கும். குழந்தைகள் விஷயத்துல ரொம்ப நிதானம் தேவை. உங்கள் உடல் ரீதியாக இருக்கக்கூடிய விஷயங்கள்ல கவனம் தேவை. தாய் தந்தையர் உடல்நல விசாரிப்பு அவர்கள் ஒரு பக்கம் இருந்து நீங்கள் ஒரு பக்கம் இருந்தா அவர்களை பற்றி அதிக அக்கறை எடுத்துக்கிறது, கூடப்பிறந்த சகோதரர்கள் கிட்ட நல்ல ஒரு அனுசரணையாக இருக்கிறது, சகோதர சகோதரிகளே எல்லா விஷயத்தையும் விட்டுக் கொடுத்து போறது நல்லது. உறவினர்களாலே நல்லது நடக்கும். சுப விஷயங்கள் செய்திகள் வரும். பண வரவு திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் நல்ல.
கடகம்
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். குடும்ப விஷயங்களில் சண்டை சச்சரவுகள் எல்லாம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. கூடிய விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். சண்டை சச்சரவு இல்லாத குடும்ப வாழ்க்கைக்கு மேற் சொன்ன விஷயம் பொருந்தும் இந்த வாரத்தில் இருந்து உங்களுக்கு நல்ல விஷயங்கள் திருப்புமுனையாக மாறும். நல்லது நடக்க ஆரம்பிக்கும். பொருத்திருங்கள். இது நல்ல வாரம்.
சிம்மம்
இந்த வாரம் மிக மிக எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக எச்சரிக்கை உணர்வோடு இருப்பது நல்லது. வண்டி வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திர சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்கிறவர்கள், கெமிக்கல் சம்பந்தப்பட்ட வகை வேலை செய்றவங்க எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அடுத்தவர்கள் சொல் பேச்சை கேட்டு எதுவும் நடக்கக்கூடாது. குடும்பத்தில் கிளம்பும்போது மன நிம்மதியோடு கிளம்பனும். கணவன் மனைவி ரொம்ப விட்டுக்கொடுத்து அன்போடு இருக்கிறது பல விஷயங்களுக்கு நல்லது.
துலாம்
மிகவும் நல்ல விஷயங்களுக்கு மட்டும் நீங்கள் ஈடுபாடு காட்டுவது நல்லது. புரளி வதந்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் சரியாக விசாரிக்காத எந்த ஒரு விஷயத்தையும் அடுத்தவர்களிடத்தில் நீங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டாம். ஆண்களுக்கு மிகவும் நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் அனுகூலம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வேலை விஷயத்துல ரொம்ப ரொம்ப நல்ல ஈடுபாட்டோடு நீங்கள் இருப்பீர்கள். குடும்பத்துல குதூகலம் இருக்கும்.
மீனம்
அன்பு, பாசம், கடமை இது அத்தனையும் இந்த வாரத்தில் உங்க கண்ணு முன்னால வந்து நிற்கிறது. யாரையும் எதிரியாக பார்க்க வேண்டாம். அனைத்து நபர்களிடத்திலும் அனுசரித்து போறது நல்லது. வம்பு சண்டை வந்தால் விலகி போறது நல்லது. வண்டி ஓட்றவங்க நம்மளுடைய சொந்த விஷயத்துக்கு ஓட்டுகிறவர்களும் ஜாக்கிரதையாக இருக்கணும். தொழில் ரீதியாக வண்டி ஓட்டுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த ஏழரை சனியின் தாக்கம் உங்களுக்கு முழுசா இருக்கும். அதனால மனசு அலைபாயும், குடும்பத்துக்குள்ள வம்பு வழக்கு வேண்டாம். கணவன் மனைவி உறவு மிகவும் விட்டுக் கொடுத்து போறது நல்லது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது அப்படின்னு நினைக்கக்கூடிய கீதையினுடைய வார்த்தை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதாரணமான வாரம்.
தனுசு
எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது. வேலை விஷயமாக உங்களுடைய ஈடுபாடு உங்களுடைய மேல் அதிகாரிகள், முதலாளிகள் அவர்களுக்கு ஒரு நல்ல ஒரு எண்ணத்தை உங்க பேர்ல நல்ல அபிப்பிராயத்தை கொடுக்கும். சில செக்டார்ல வேலை செய்கிறவர்களுக்கு உத்யோக உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு அம்மாவினுடைய உடல்நிலை கவனிக்க வேண்டும். எதிலும் நிதானம் இருக்கும். ஆகையால் நீங்க அவசரப்படாம இருக்கணும். பொதுவாக இந்த வாரம் நல்லதும் கெட்டதுமாக இருக்கக்கூடிய வாரம்.
விருச்சிகம்
எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்ட வேண்டாம். எப்பவோ வாங்கின பொருள்களுக்கு இப்ப நீங்க பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும். அதனால இ.எம்.ஐ. விஷயத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். அடுத்தவர்கள் தொல்லைகள் குடும்பத்துக்குள்ள வரும். குடும்ப விஷயத்துல குடும்ப நபர்களை தவிர வேறு யாருடைய விஷயத்திலும் ஈடுபட வேண்டாம். பிரயாணங்கள், வெளியூர் பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை விஷயமாக செல்வதை தவிர டூர் போறேன் அப்படிங்கறதெல்லாம் வேண்டாம். பொதுவாக ஜாக்கிரதையாக இருக்கக்கூடிய வாரம். மகன், மகள் விஷயத்துல ரொம்ப எச்சரிக்கை தேவை. அவர்கள் அருகில் இருந்து பார்த்துக் கொள்வது முக்கியம்.
கும்பம்
நல்ல ஆன்மீகம் தேவை. கடவுள் அருள் நிறைய உண்டு. இந்த வாரத்தில் அனைத்து வயதினருக்கும் குடும்பமே கோவில். குடும்பத்தில் இருப்பவர்கள் தெய்வம், பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள செலவுகள் எல்லாம் கட்டுக்குள் இருக்கும். முயற்சி செய்து கடன் வாங்க வேண்டாம். கடனை அடைப்பது நல்லது. நல்ல எண்ணம், நல்ல செயல் என்றும் உங்களை காப்பாத்தும். மிக அற்புதமான வாரம்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


