முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இந்த வார ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: Monday, March 25, 2024 to Sunday, March 31, 2024
மேஷம்
aries-mesham

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி --       இந்த வாரம் மன மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டு. வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். தொழில் திறன் அதிகரித்து முன்னேற்றம்   ஏற்படும். வியாபார நிமித்தமாக தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். அரசு பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும்.

பரணி  --      இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.  நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். உங்களுக்குத் தெய்வ சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி நிலவும்.  உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

கார்த்திகை  1 ஆம் பாதம்.—       இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். பிராயணங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர் இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்க புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். 

ரிஷபம்
taurus-rishibum

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் –       இந்த வாரம் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய சுற்றுலாப் பயணங்கள் சென்ற இன்புறுவீர் கள். புதிய நண்பர்களால் பல நன்மைகள்  ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். எனவே, ஆசிரியர்கள் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  சிலருக்குப் பணியில் இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும். எனவே  துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.

ரோகிணி  –          இந்த வாரம் எதிர்பாராத தனவரவு வர ஏற்றம் காண்பீர்கள்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உடன் பணிபுரிபவர்கள் வேலையில் சிற்சில தொந்தரவுகள் எழலாம். எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படாமல் எதையும் ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. அரசுப் பணியில் உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அலுவலகத்தில் பதவி உயர்வில் பிரச்சனைகள் எழலாம் தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.

மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் –      இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு, பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தொழிலில் அபிவிருத்தி  நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தைவழி உறவுகளை தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள். உடன் பிறப்புகளுடன் சுமுகமாக செல்வது நல்லது. இடைவிடாத வேலை பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். அசைவ விரும்பிகளுக்கு அஜீரண தொல்லைகள் எழலாம். பழைய கடன்கள் சுலபமாக வசூலாகும்.

மிதுனம்
gemini-mithunum

(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். –       இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பார்கள். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு  ஞான தன்மை  அதிகரிக்கும். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படும்.  உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப்பயன்களை அடைவீர்கள்.  வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.  கவனம் தேவை.

திருவாதிரை ---       இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் இனிய பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தர்மங்கள் செய்வார்கள். அரசாங்கத்தால் அனுகூல பலன்கள் உண்டு. உறவு மற்றும் நண்பர்கள் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலம் தொழிலில்  அதிகமாக ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர்.  வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. 

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.      இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொலை தூரப்பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம்.  வீண் அலைச்சல்கள் ஏற்படும். ஆயினும், பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தை பெற்று உயர் பதவிகள் கிடைக்கும்.  எதிரிகளின் பணமும் வந்து சேரும்.  வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவம் உண்டாகும். சிலருக்குக் குழந்தைகளால் தொல்லையும், அவமானங்களும் ஏற்படலாம்.

கன்னி
virgo-kanni

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.      இந்த வாரம் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள்  மூலம் நன்மைகள் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலமாக இருக்கும்.. அதன் காரணமாக சேமிப்புகளில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள்.

ஹஸ்தம் –              இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலைப்பளு காரணமாக, உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

சித்திரை – 1,2 பாதங்கள் –             இந்த வாரம் சுறுசுறுப்பாக பணிகளை ஆற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். புனித யாத்திரைகளின் மீத ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்புக்காக பல இடங்களுக்கு அலைந்து திரிய வேண்டும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் வாடிக்கையாளர்களைக்  மீது இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள்.   நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.

மகரம்
capricorn-magaram

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---        இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும்.

திருவோணம் -              இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

அவிட்டம் 1,2 பாதங்கள் –               இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். சிலருக்கு, எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தித்திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள்.

கடகம்
cancer-kadagam

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.       இந்த வாரம் உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின்  அறிவுத்திறன் கூடும்.  பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.  தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்.  அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.

பூசம் --        இந்த வாரம் தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன்பிறப்புக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு அருந்த முடியாத நிலை ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம் –       இந்த வாரம் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்  பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்பு உணர்வு கொண்ட வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். புது புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவார்கள். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக வருவாய் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும். 

சிம்மம்
leo-simmam

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் –       இந்த வாரம் மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். இசை ஆர்வத்தால் சங்கீத சபா களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வார்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.  சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். சந்ததி விருத்தி ஏற்படும்.  அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.

பூரம் –       இந்த வாரம் உங்களுக்கு தொழில், வியாபாரம் சம்பந்தமான திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும்.  புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். அவர்களின் அன்பு மற்றும் ஆதரவால் இடமாற்றங்கள் நினைத்தபடி கிடைக்கும்.  சிலருக்குச் சோதனைகள் பல வந்தாலும் அதை சாதனையாக்கி வெற்றி பெறுவார்.  

உத்திரம்- 1 பாதம் –       இந்த வாரம் புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும். அதற்கான வங்கி கடன் உதவிகள் சுலபமாக கிடைக்கும். வீட்டில் திருமணம் சம்பந்தமான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சி நிலவும். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கு முன் நன்கு படித்த பின் கையொப்பம் இடவும். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபார விருத்தி ஏற்படும்.  அரசுப் பணிபுரிபவர்களுக்கு விருப்பப்படி புதிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் அதனால் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும்.

துலாம்
libra-thulam

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –       இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். மாணவர்கள் அன்றன்றைக்கு தங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். வியாபாரிகள் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால் தான் அவர்களுக்கு உழைப்புக்கு  ஏற்ற இலாபமோ, பலன் கிடைக்கும். பழுதடைந்த வீடுகள் மராமத்து செய்ய வேண்டிய நிலை உருவாகும். அரசு அதிகாரிகள் கெடுபிடி அதிகம் ஆகி குழப்பங்கள் ஏற்படலாம்.

சுவாதி –             இந்த வாரம் புது தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். நண்பர்கள் பகைவர்கள் ஆக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.  புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் –       இந்த வாரம் விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும்.

மீனம்
pisces-meenam

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –             இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய வீடு அமையும். அரசுப் பணியாளர்களுக்கு மனதுக்குப் பிடித்த, புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து கௌரவம் உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்கள் நன்கு படித்து  தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். 

உத்திரட்டாதி-      இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், சொந்த பந்தங்களிடையே ஒற்றுமை மேலோங்கவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. அதுபோல் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. செய்தொழில், வியாபாரம் நன்றாக நடந்து இலாபம் பெருகும்.

ரேவதி-        இந்த வாரம் கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.  மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

தனுசு
sagittarius-thanusu

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் –        இந்த வாரம் உங்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும்.

பூராடம் –       இந்த வாரம் மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

உத்திராடம் –1 ஆம் பாதம் –        இந்த வாரம் பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.  எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். பெரிய  மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்
scorpio-viruchagam

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம் –       இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். அன்னையின் அன்பு, அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.

அனுஷம் –       இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். ஓரளவே பணவரவு இருக்குமாதலால் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அத்துடன், சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கேட்டை –       இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றஞ்சாட்டப்பட்டு அவதிப்பட நேரலாம். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம்.

கும்பம்
aquarius-kumbam

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

சதயம்-     இந்த வாரம்  மனதில் தெய்வ பக்தி மேலிடும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். மேடைப் பேச்சாளர்களுக்குத் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் கிடைக்கும்.. பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –            இந்த வாரம் மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள்.  உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற மிகுந்த அக்கறையுடன்  படித்தல் அவசியம். 

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago