முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் 63 பெண்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

சென்னை, பிப்.19-

ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் பெண்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை.

24-ந்தேதி அன்று ஜெயலலிதாவிந் 63-வது பிறந்தநாளாகும். மாசிமகம் என்பதால் ஜெயலலிதாவின் மகம் நட்சத்திரம் என்பதாலும் நேற்று சென்னை அசோக்நகரிலுள்ள பீடாரி காளியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிடும் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கோகுலஇந்திரா தலைமையில் 63 பெண்கள் மண் சோறு சாப்பிட்டனர். இதில் முன்னாள் எம்.பி. சரோஜா, தென் சென்னை மாவட்ட  மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் வ.மைத்ரேயன், பாசறை செயலாளர் வி.பி.கலைராஜன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜினன், அபுதிபக், 114-வது  வட்டச் செயலாளர் சின்னய்யா, சரோஜினி சீனிவாசன், மற்றும் பகுதி, வட்ட பொறுப்பாளர்கள் ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony