முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க.கூட்டணி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

மதுரை பிப்.19

மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க.கூட்டணி  கவுன்சிலர்கள்

மதுரையில் இன்று உண்ணாவிரதம்.

மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க.கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மதுரையில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 

   இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் கே.ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், ரோடுகளை சீரமைக்க கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும், மாநகராட்சி அதிகாரிகளின் பாரபட்ச போக்கை கண்டித்தும் மாநகராட்சி அ.தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் இன்று (சனிக்கிழமை) மதுரை முனிச்சாலை கிழக்குமண்டல அலுவலகத்திற்கு எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்திற்கு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து தலைமை வகிக்கிறார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகிக்கிறார். இதில் அ.தி.மு.க.மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 18 பேரும் கலந்து கொள்கிறார்கள்.

   இந்த உண்ணாவிரத போராட்டத்தை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்து பேசுகிறார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மதிமுக மாநகர் மாவட்டசெயலாளர் புதூர் பூமிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகிறார்கள். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.  உண்ணாவிரத போராட்ட முடிவில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாள்,கனிமொழி, மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டமும் நடைபெறுகிறது.  உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க.கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்