முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானை மறுசீரமைக்க 5 ஆண்டுகள் பிடிக்கும்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர், மார்ச் 22 - பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டை மறுசீரமைக்க 5 ஆண்டுகள் பிடிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 11 ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியாலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புகுஷிமா அணுமின் உலைகள் வெடித்து சிதறியதால் அந்நாட்டின் மின்உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதத்தின் மொத்த மதிப்பு 23 ஆயிரத்து 500 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் நாட்டின் பொருளாதாரமே முடங்கிப் போயுள்ளது. 

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட இந்த இரு இயற்கை சீற்றங்களினால் 21 ஆயிரத்து 400 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சேதங்களால் சீர்குலைந்து போன ஜப்பான் நாட்டை மறுசீரமைக்க சுமார் 5 ஆண்டுகள் பிடிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவற்றுக்காக காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய தொகை 1,400 கோடி டாலர் முதல் 3,300 கோடி டாலர் வரை இருக்கும் என்றும் உலகவங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்