முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் நாளை 49 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, பிப்.22 - உத்தரபிரதேசத்தில் 5 ம் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 7 கட்டங்களில் ஏற்கனவே 4 கட்டங்களுக்கான  தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இப்போது 5 வது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 13 மாவட்டங்களில் நடைபெறும் இந்த 5 வது கட்டத் தேர்தலில் மொத்தம் 248 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 76 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்த வேட்பாளர்களில் 118 பேர் கோடீஸ்வரர்கள். சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 48 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேரும், பா.ஜ.க.வைச் சேர்ந்த 13 பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த 12 பேரும் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று இந்த 49 தொகுதிகளிலும் அனல்பறக்கும் சூறாவளி பிரச்சாரம் நடைபெற்றது. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், பா.ஜ.க. ஆகிய 4 கட்சிகளின் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கினார்கள். ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்துமுடிந்துள்ள வேளையில் இந்த 5 கட்ட தேர்தலையும் அமைதியாகவும் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயுதம் ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago