முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில் கட்டணம் உயராது: ரெயில்வே அமைச்சர் பேட்டி

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, பி.22 - ரெயில் கட்டணம் உயராது என்று  சென்னையில் ரெயில்வே அமைச்சர் திரிவேதி கூறியுள்ளார் மத்திய ரெயில்வே அமைச்சர் திரிவேதி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு.

 

கேள்வி:​ மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? 

பதில்: ​எங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமையாக உள்ளோம். 

 

கே:​ நிதி ஒதுக்குவது தொடர்பாக உங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதா? 

ப:​ எங்களிடையே பிரச்சினை இல்லை. நமது நாட்டில் ரெயில்வே துறை போக்குவரத்து பயன்பாட்டுக்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரெயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதி நாட்டின் வளர்ச்சிக்கு செய்யப்படும் முதலீடு ஆகும். எனவே ரெயில் துறைக்கு கூடுதல் தொகை ஒதுக்குவார்கள் என நம்புகிறேன். கே:​ரெயில்வே பட்ஜெட்டில் புதிய ரெயில் திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகுமா? ப:​புதிய ரெயில்கள் விடுவது மட்டும் நாட்டின் வளர்ச்சி ஆகாது. சமீபகால மாக ரெயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து பலமடங்கு அதிகரித்து உள்ளது. ரெயில்வே துறையை நவீனப்படுத்துதல், அபிவிருத்தி பணிகள், உள்கட்ட மைப்பு வசதிகளை உருவாக்குவது அவசியம் ஆகும். இதுபோன்ற உள்கட்டமைப்புகள் நவீனப்படுத்துதல் போன்ற திட்டங்கள் ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெறும்.   

 

கே:​ ரெயில் கட்டணம் உயருமா?

ப: ​ரெயில்வே துறையில் வருமானத்தை பெருக்க பல்வேறு வழிகள் உள்ளன. வருமானத்தை பெருக்க மாற்று வழிகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். தனியாருடன் இணைந்து வருமானத்தை பெருக்க புதிய திட்டங்களும் வழிமுறைகளும் பட்ஜெட்டில் இடம்பெறும்.

 

கே: ​பயணிகளிடம் பாதுகாப்பு வரி வசூலிக்க வேண்டும் என ரெயில்வே பாதுகாப்பு குழு அறிக்கை தந்துள்ளதே? 

ப: ​பயணிகள் பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து ரெயில்வே பாதுகாப்பு குழு அறிக்கை தந்துள்ளது. அதில் பயணிகளுக்கு பாதுகாப்பு வரி விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. அதனை ரெயில்வே துறை செயல்படுத்த வேண்டும் என்று எதுவும் கூற வில்லை. 

 

கே:​ ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய ரெயில் திட்டங்கள் மற்றும் வழித்தடங்கள் அறிவிக்கப்படுமா? 

ப: ​தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரெயில் திட்டங்கள், சிறப்பு ரெயில்கள் சமமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago