முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜீத்சிங் மகன் மீது குற்றமில்லை: தேர்தல் ஆணையம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, பிப். 23 - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் தெரிவிக்கப்பட்ட மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜீத்சிங்கின் மகன் ஜயந்த் சவுத்ரி மீது குற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதுராவில் உள்ளூர் தலைவர்களிடம் இருந்து சவுத்ரி பணத்தை பெறும் காட்சி வீடியோவில் பதிவாகி இருந்தது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சவுத்ரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த தொகுதி ராஷ்டிரிய லோக்தள் கட்சி வேட்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தேர்தல் விதிமீறல் ஏதுமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 

சம்பந்தப்பட்ட வீடியோவை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலித்தனர். அதில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ரூ. 51,000 பணம் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக அல்ல என்பது தெரியவந்தது. தேர்தல் பணிகளை கவனிப்பதற்காகவே அந்த பணம் வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனது செலவு பதிவேட்டிலும் சம்பந்தப்பட்ட ராஷ்டிரிய லோக்தளம் கட்சி வேட்பாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதை தேர்தல் பார்வையாளர்கள் பரிசோதித்திருக்கின்றனர் என்று மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி அனிதா மெஷ்ரம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்