முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா குண்டுவெடிப்பில் பிரெஞ்சு பெண் நிருபர் பலி

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

ஹோம்ஸ், பிப். 25 - சிரியாவில் நிகழ்ந்த குண்டுவீச்சு தாக்குதலம் பிரபல போர்முனை செய்தியாளர் மேரிகொல்வின், பிரபல பிரெஞ்சு புகைப்படக்காரர் ரெமி ஓசலில் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து அங்கு மேற்கத்திய நாடுகளை சேர்ந்த செய்தியாளர்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் அரசு எதிர்ப்பாளர்களின் துணையுடன் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் சிலர் அங்கு சென்று நடப்பதை உலகிற்கு அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹோம்ஸ் நகரில் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் மேரிகொல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்படக்காரர் ரெமி ஓசலிக் ஆகியோர் தங்கியிருந்த கட்டிடம் மீது அரசு படைகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தின. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 

மேலும் மூன்று பத்திரிக்கையாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் புகழ் பெற்ற வெளிநாட்டு செய்தியாளரான மேரிகொல்வின் அமெரிக்காவில் பிறந்தவர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த இவர், உலகின் மோதல் நடக்கும் நாடுகளுக்கு சென்று செய்தி சேகரிப்பதில் துணிச்சல் மிக்கவர். 

மேலும் கடந்த 2001 ம் ஆண்டு இலங்கையின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் செய்தி சேகரிக்க எல்லையை தாண்டிய போது சிங்கள படைகள் வீசிய குண்டு தாக்குதலில் படுகாயமடைந்த கொல்வின், தனது ஒரு கண்ணையும் இழந்தார். சிறந்த வெளிநாட்டு பத்திரிக்கையாளருக்கான பிரிட்டிஷ் அரசின் விருதை வென்றவர் மேரி கொல்வின். கொல்வின் படுகொலைக்கு சர்வதேச அளவில் கண்டனங்களும், இரங்கல் செய்திகளும் வெளியாகி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony