முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயல் பணி ஒப்படைப்பு நிறுவனங்களுக்கு வரி: ஒபாமா

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 25 - அயல் பணி ஒப்படைப்பு நிறுவனங்களுக்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைகளை அளிக்கும் நிறுவனங்கள் வரி விதிப்புக்குள்ளாகும். இது இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பாக அமையும். அமெரிக்காவில் வேளை வாய்ப்பை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் ஒபாமா எடுத்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து பணிகளை வெளிநாடுகளுக்கு அளிக்கும் நிறுவனங்களால் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போகிறது என்ற காரணத்தினால் அத்தகைய நிறுவனங்களுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளனர். 

தகவல் தொழில்நுட்ப துறையில் பெருமளவிலான பணிகளை இந்தியா போன்ற நாடுகள் நிறைவேற்றி  தருகின்றன. இப்போது வரி விதிக்கப்படுவதால் இந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதே சமயம் வெளிநாடுகளின் மூலம் நிறைவேற்றி வரும் பணிகளை அமெரிக்காவிலேயே திரும்ப நிறைவேற்ற முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை ஒபாமா எடுத்திருப்பதாக கருத்துகள் வெளியாகி உள்ளன. 

மேலும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. வெளிநாடுகள் மூலம் பணிகளை நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு இனி மேலும் வரி சலுகை அளிப்பதில்லை என்று ஒபாமா முடிவு செய்துள்ளார். வெளிநாடுகளில்  நிறைவேற்றப்பட்ட பணியை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வந்து செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு அதற்காகும் செலவில் 20 சதவீதத்தை ஊக்க தொகையாக அளிக்கவும் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக ஒபாமா அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony