முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் விலை உயர்க்கு இந்தியாதான் காரணமாம் அமெரிக்கா

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். - 27 - உலகின் மிகப் பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கட்நத ஆண்டு சர்வதேச அளவில் பொருட்களின் விலை உயர்ந்ததற்கு குறிப்பாக உணவு பொருட்களின் விலை உயர்ந்ததற்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே காரணம் என்று வெள்ளை மாளிகையின் செய்தி பிரிவு செயலர் ஜாஷ் ஏர்னஸ்ட் தெரிவித்தார். இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் தேவை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவும் சர்வதேச சந்தையில் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்