முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபியை கொல்வது எங்கள் நோக்கம் அல்ல - அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.23 - கடாபியை கொல்வது எங்கள் இலக்க அல்ல. லிபியா நாட்டு மக்களை காப்பாற்றுவதே எங்கள் நோக்கம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது ராணுவத்தை ஏவி தாக்குதலை கடாபி நடத்தி வருகிறார். இதை தடுத்து நிறுத்தவும் அதிபர் பதவியில் இருந்து கடாபியை நீக்கவும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதிபர் கடாபி மாளிகை மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுவீசி தாக்கின. இதில் அதிபர் கடாபி மயிரிழையில் உயிர்தப்பினார். 

இந்தநிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடஸ் வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கடாபியை கொல்வதுதான் அமெரிக்க கூட்டுப்படையின் நோக்கமா என்று நிருபர்கள் கேட்டதற்கு அதுவல்ல என்று பென் ரோடஸ் பதில் அளித்தார். லிபியா நாட்டு மக்களை பாதுகாப்பதுதான் எங்கள் நோக்கம் என்றும் அவர் கூறினார். இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். நாங்கள் எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் நோக்கம் தெளிவாக க்ஷெக்ஷக்ஷவளியே தெரியும். லிபியா நாட்டு மக்களை காப்பாற்றத்தான் என்று பென் ரோடஸ் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்