முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு

புதன்கிழமை, 23 மார்ச் 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.23 - மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும் 38 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் அடைவார்கள். விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் இது கொஞ்சம் நிவாரணம் அளிக்கும்.

மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது 6  சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இதனால் மத்திய அரசுக்கு வருடத்திற்கு கூடுதலாக ரூ 5 ஆயிரத்து 715.90 கோடி செலவாகும். கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதியில் இருந்து கொடுக்கப்படுவதால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசக்கு ரூ.6 ஆயிரத்து 668.52 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. தற்போது அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 45 சதவீதம் வரை கொடுக்கப்படுகிறது. 6 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால் இனி அடிப்படை சம்பளத்தில் 51 சதவீத அகவிலைப்படி கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்