முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சபாநாயகர் உத்தரவு

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், மார்ச் - 4- ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு அளித்து வரும் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர்  உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில்  முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு மீது கடந்த டிசம்பர் மாதம் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.கட்சி கட்டளையை மீறி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்ட இந்த 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்கக்கது கட்சி கட்டுப்பாட்டை மீறிய இவர்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆந்திர சட்டசபையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த முடிவை இதுவரை அளிக்காமல் இருந்த சபாநாயகர் நாடெந்தலா மனோகர் நேற்று இவர்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த பிரச்சினைக்கு சபாநாயகர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து விட்டது. இந்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியைச்  சேர்ந்த  எம்.எல்.ஏ.  ஷோபன் நாகிரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். ஷோபன் நாகிரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது. 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர்,  ஷோபன் நாகிரெட்டியின் ராஜினாமாவையும் ஏற்றுக்கொண்டார். இந்த நடவடிக்கைகளை அடுத்து  294 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 154 ல் இருந்து 137 ஆக குறைந்து விட்டது.  இருந்தாலும் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை  சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிரண் குமர் ரெட்டி அரசுக்கு இருக்கிறது. அதனால் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்படவில்லை. இந்த நிலையில் ஆந்திராவில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இம்மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவற்றில்  6 தொகுதிகள் தெலுங்கானா பிராந்தியத்திலும் 1 தொகுதி ராயல சீமா பிராந்தியத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்