முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ.மார்ச் - 4 - உத்தர பிரதேச சட்டசபைக்கு இறுதிக்கட்டமாக நேற்று நடந்த தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு  தேர்தல் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த 7 கட்ட தேர்தல்களும் நேற்றுடன் முடிவடைந்தன.  ஏற்கனவே  6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள வேளையில் நேற்று 7 வது மற்றும்  இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.  பரேலி, மொராடாபாத், பிஜ்னூர், பதாவூன், ராம்பூர் உள்ளிட்ட  10 மாவட்டங்களில் இந்த இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களை போல இந்த இறுதிக்கட்ட தேர்தலும் அமைதியாக நடைபெற்றது.  ஆண்களும் பெண்களும் காலை முதற்கொணஅடே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டனர். திருவிழாக் கூட்டம்போல வாக்காளர்கள் சாரி சாரியாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்றனர். வாக்குப்பதிவின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாவண்ணம் தேர்தல் ஆணையம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.  தேர்தல் பாதுகாப்பிற்காக 1.5 லட்சம்  போலீசாரும்  772 கம்பெனிகள் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.  நேற்று வாக்கெடுப்பு நடந்தபோது பாதுகாப்பு கண்காணிப்பிற்காக இரு ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமடித்துக்கொண்டு இருந்தன. இந்த ஹெலிகாப்டர்கள் நேபாளத்தை ஒட்டியுள்ள சர்வதேச எல்லை பகுதியிலும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியிலும் பறந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டன.  பதட்டம் நிறைந்த பகுதிகளில் பறக்கும் படை போலீசாரும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று இறுதிக்கட்டமாக நடந்த 60 தொகுதிகளில்   9ே62  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 100 பேர் பெண்கள்.

நேற்று இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்  வருகிற 6 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போது  உ.பி.யில்  எந்த கட்சி ஆட்சி  அமைக்கும் என்பது  தெரிந்துவிடும். இந்த இறுதிக்கட்ட தேர்தலில் நேற்று 70 சதவீத வாக்குகள் பதிவானதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்