முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டணத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு 50 சதவீத சலுகை வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 4 - ஆந்திர மாநிலம் பிரசாந்தி நிலையத்தில் சத்திய சாய்பாபாவின் ஆசீர்வாதத்தை நாடி அங்கு செல்லும் பக்தர்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்க வேண்டும் என்று கோரி ஸ்ரீசத்யசாய் சேவா அமைப்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக, ஸ்ரீசத்ய சாய்பாபா அமைப்பின் டிரஸ்டி டெல்லியில் நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும் குருபூர்ணிமா, தசரா, ராமநவமி, தீபாவளி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையம் வருவதால் சிருதி என்ற இடத்தில் ரயில் யாத்திரை பவனம் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். இது குறித்து ரயில்வே அமைச்சரிடம் கடிதம் ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார். 

அதில் பிரசாந்தி நிலையத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே உங்களது துறை ரயில்வே கட்டணத்தில் 50 சதவீத சலுகையை அளித்து விட்டது. இதன் மூலம் நான் மற்றொரு கோரிக்கை வைக்கிறேன். அதாவது, 2 வது வகுப்பு மற்றும் தூங்கும் வகுப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களிலும் 50 சதவீத சலுகையை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, பண்டிகை நாட்களில் இந்த சலுகையை அளிக்க வேண்டும் என்றும் சாய்பாபா அமைப்பின் டிரஸ்டியான கம்பேகர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய ரயில்வே இணையமைச்சரையும் அவர் சந்தித்து தனது கோரிக்கையை வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்