முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிங்பிஷர் நிறுவனத்தின் 40 வங்கி கணக்குகள் முடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 4 - கிங்பிஷர் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 40 வங்கி கணக்குகளை  சேவை வரித்துறை முடக்கி வைத்துள்ளது. தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இந்நிறுவனம் தான் செலுத்த வேண்டிய வரிகளை ஒழுங்காக செலுத்த முடியாத நிலைக்கு  தள்ளப்பட்டது. வருமான வரித்துறைக்கும் தான் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை. இதனால் இந்நிறுவனத்தின்  வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள்  முடக்கி வைத்தனர். மேலும் சேவை வரி துறைக்கு செலுத்த வேண்டிய ரூ. 70 கோடியையும் இந்நிறுவனம் உரிய  காலத்தில் செலுத்தவில்லை. இதை அடுத்து இந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  ரூ. 10 கோடி ரூ. 20 கோடி என்று காலம் தாழ்த்தி செலுத்திய இந்நிறுவனத்திற்கு பிப்ரவரி 29ம் தேதிக்குள் மீதமுள்ள ரூ. 40 கோடியை செலுத்த வேண்டும் என்று சேவை வரி துறை உத்தரவிட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அந்த தொகையை கிங்பிஷர் நிறுவனம் செலுத்த  தவறியதால்  இந்நிறுவனத்தின் 40 வங்கி கணக்குகளை  சேவை வரித் துறை முடக்கி வைத்துள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது. வரி செலுத்துவது தொடர்பாக கிங்பிஷர் நிறுவனத்திடமிருந்து ஏதேனும்  தகவல் வந்ததா என்று கேட்டதற்கு  இதுவரை வரவில்லை. ஒரு வேளை திங்கள் கிழமை எதிர்பார்க்கிறோம் என்று சேவை வரித்துறை ஆணையர்  எஸ்.கே.சோலங்கி  தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக கிங்பிஷர் நிறுவத்தின் செய்திதொடர்பாளர் யாரையும் தொடர்பு கொண்டு கேட்க முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்