முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பிரச்சனை: முதல்வர் தலைமையில் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.6 - முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை, வரவிருக்கும் தமிழக பட்ஜெட் மற்றும் மின்வெட்டு விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அப்போது துறைவாரியாக மானிய அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் தனது பல்வேறு பணிகளுக்கு இடையே துறைவாரியாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாத காலமாக ஆய்வு நடத்தி வருகிறார். அந்த கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற முடிவுகளையொட்டி முதல்வர் ஜெயலலிதா அளிக்கின்ற ஆலோசனையின்படி தமிழக அரசின் பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. அமைச்சர்களிடம் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் துறைவாரியான திட்டங்களை தயாரிப்பது, பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது போன்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் புதிய திட்டங்கள், அரசின் முக்கிய கொள்கை முடிவுகள், புதிய பட்ஜெட் போன்றவை குறித்தும் அமைச்சரவையில் பேசப்பட்டதாக தெரிகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை முதல்​அமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்ப்புக் குழுவினரும் முதல்​அமைச்சரை சந்தித்து உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள். அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே, இதேபோல நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் அச்சத்தைப்போக்கும் வகையில் மத்திய அரசு கூடங்குளம் விவகாரத்தை அணுக வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதையொட்டி நேற்றைய கூட்டத்திலும் இவ்விஷயம் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தில்  மின்வெட்டை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்