முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 6 - உள்நாட்டு சந்தையில் சப்ளையை அதிகரிக்க செய்யும் வகையில் பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக டைரக்டர் ஜெனரல்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், உள் நாட்டில் பருத்தி சப்ளையை அதிகரிக்கும் நோக்கத்தில் வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது என்றார்.பருத்தியை ஏற்றுமதி செய்ய ஏற்கனவே பதிவு சான்றிதழ் பெற்றவர்களுக்கும் கூ ட இந்த தடை பொருந்தும் என்றும், எனவே அவர்களும் பருத்தியை ஏற்றுமதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

நடப்பு வணிக ஆண்டில் ஏற்கனவே 85 லட்சம் பேல் பருத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் 2011 - 12 ம் ஆண்டில் பருத்தி உற்பத்தி 335 லட்சம் பேல்களாக இருக்கும் என்று  பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.உள் நாட்டு சந்தையில் பருத்தி சப்ளை சீராகும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்