முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயல் நிவாரண நிதி ரூ.140.39 கோடியை எட்டியது

புதன்கிழமை, 7 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.7 - தானே புயல் நிவாரண நிதிக்கு நேற்று மட்டும் 4.14 கோடி ரூபாய் நிதியளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 140 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 745 ரூபாய் குவிந்தது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (6.3.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

எச்.சி.எல். டெக்னாலிஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை

திட்ட நுணுக்கச் செயல் அலுவலருமான சிவ் நாடார், 2 கோடியே 50 லட்சம் ரூபாய்.

மோகன் பிரிவரிஸ் மற்றும் டிஸ்டலரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்

மற்றும் மேலாண்மை இயக்குநர் எம். நந்தகோபால்  64 லட்சம் ரூபாய்.

கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல்

அலுவலருமான கே.வெங்கடராமன் 50 லட்சம் ரூபாய்.

பி.எஸ்.ஜி. மற்றும் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகி எல்.கோபாலகிருஷ்ணன் மற்றும்

முதுநிலை நிர்வாகி வி.ராஜன் ஆகியோர் 50 லட்சம் ரூபாய்.

டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஊழியர்கள் சார்பாக அதன்

ஆசிரியர் மருது அழகுராஜ் 25 ஆயித்து 900 ரூபாய்.

தமிழக முதலமைச்சரிடம், தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 4 கோடியே 14 லட்சத்து 25 ஆயிரத்து 900 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (6.3.2012) அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 140 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 745 ரூபாயாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்