முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தா.பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூ. உண்ணாவிரதம்

புதன்கிழமை, 7 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

தாம்பரம், மார்ச்.7 - இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் தா. பாண்டியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினரும் திரளாக பங்கேற்றனர். அ.தி. மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், பல்லாவரம் எம்.எல்.ஏ. தன்சிங், பல்லாவரம் நகராட்சி தலைவர் முகமதுநிசார், துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய குழு தலைவர் என்.சி.கிருஷ்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், பேரூராட்சி தலைவர் சாந்தகுமார், மோகன், சம்பத் உள்பட 500​க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பழ.நெடுமாறன் பேசும்போது, உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க. பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசும்போது, இலங்கையில் தமிழர்கள் அழிய காரணமாக இருந்ததற்கு மத்திய அரசும் அதனுடன் கூட்டணி அமைத்திருந்த தி.மு.க. வும்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். தா.பாண்டியன் பேசும்போது, இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம். ராஜபக்சேவின் குற்றத்துக்கு இந்தியாவுக்கும் பாதி பங்கு உண்டு. ராஜபக்சே மீது ஐ.நா. விசாரணை நடத்தினால் இந்தியாவின் பங்கும் தெரிந்துவிடும் என்பதற்காக தீர்மானத்தை ஆதரிக்க தயங்குகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்