முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ஜனாதிபதி: கலாமிற்கு மீண்டும் வாய்ப்பு?

புதன்கிழமை, 7 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.7 - நாட்டின் புதிய ஜனாதிபதியாக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெரும் குழப்பத்தில் உள்ளது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மற்றும் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 25 ம் தேதியுடன் முடிவடைகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்தி முடித்த கையுடன் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய பதவிகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 16 ம் தேதி வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டி இருக்குமானால் 19 ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்குகள் 21 ம் தேதி எண்ணப்படும். ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முடிந்தவுடன் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கும். இந்த இரு தேர்தல்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி குரோஷி ஓய்வு பெறுகிறார். 

கடந்த 2007 ம் ஆண்டு ஜூலை மாதம் 25 ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவியேற்றுக் கொண்டார். 2012 ஜூலை மாதம் 25 ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. தற்போதைய நிலைமைகளின் படி மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு யாரை ஜனாதிபதியாக தேர்தலில் நிறுத்துவது என்பதில் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு காரணம், எந்த கூட்டணி கட்சியும் காங்கிரசை உறுதியாக ஆதரிக்காததுதான். தற்போதைய சட்டசபை தேர்தல் முடிவுகள் கூட ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கூட்டு கட்சிகளில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில் அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்க காங்கிரஸ் கட்சியில் விவாதம் நடக்க தொடங்கியுள்ளது. தற்போதைய சட்டசபை தேர்தல் முடிவுகளையடுத்து ஜனாதிபதி தேர்தலும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்