முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை

புதன்கிழமை, 7 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,மார்ச்-8-மகம் நட்சத்திரப்படி இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகும். இதையொட்டி இன்று மாலை அவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலுக்கு அவர் செல்கிறார். ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24ம் தேதியாகும். ஆனால், அவருடைய மகம் நட்சத்திரப்படி இன்று (புதன்கிழமை-மார்ச் 7) பிறந்த தினம் வருகிறது. இதையொட்டி இன்று மாலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

 

ஜெயலலிதாவின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்திலும், ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலும் நேற்றிரவு முதலே மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. ஸ்ரீரங்கம் தான் ஜெயலலிதா கடந்த தேர்தலில் வென்ற சட்டமன்றத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் மகம் நட்சத்திரப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையிலும் இன்று நடைபெறுகின்றன. மைலாப்பூர் கபாலீஸ்வரர், பிராட்வே காளிகாம்பாள் கோயில் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காளிகாம்பாள் கோயிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்