முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மகளிர் நாள்: கருணாநிதி வாழ்த்து

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - உலக மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: மார்ச் 8ஆம் நாள்! உலக மகளிர் நாள்! இந்நாள், மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்! அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர்

பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாகஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் பெற்றுத் தந்த nullதிக் கட்சி தொடங்கப்பட்ட நூறாம் ஆண்டு நடைபெறும் வேளையில் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா கொண்டாடப்படுவது மகளிர் ஒவ்வொருவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படத்தக்க இனிய நிகழ்வாகும்.

பொதுமக்கள் நலம் நாடாத இன்றைய அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வரலாறு காணாத வகையில் தினமும் 15 மணி நேர மின்சாரத் தடைகள், மிகவும் கடுமையான விலைவாசி உயர்வுகள் போன்றவைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மகளிர், இக்கொடுமைகள் எல்லாம் விரைவில் அகலும்; மீண்டும் நல்வாழ்வும், நலத் திட்டங்களும் கிடைக்கும்; நமது வீடும், வீட்டில் வளரும் இளம் செல்வங்களின் எதிர்கால வாழ்வும் மலரும் எனும் நம்பிக்கையோடு இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழாவைக் கொண்டாடிட தமிழக மகளிர்க்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago