முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் கைது!

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      ஊழல்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.7 - செல்போன் வியாபாரியின் வழக்கை நேர்செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் ராஜனை சி.பி.ஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.  மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனராக பதவி வகிப்பவர் ராஜன் தூத்துக்குடி  மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் சுங்க இலாக்காவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். விமான நிலையத்திலும், துறைமுகத்திலும் சுங்க இலாகா உயர்அதிகாரியாக பதவி வகித்தவர்.

பின்னர் பதவி பெற்று வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றார். அடிக்கடி சென்னையில் செம்மரக்கட்டைகள் கடத்தல் , போதை மருந்து கடத்தல் போன்றவற்றை அவர் தலைமையில் அதிகாரிகள் பிடித்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் ராஜன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள சி.பி.ஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்அவரை அவர் வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரது கார் ஒட்டுநர் முருகேசன் என்பவரையும் கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஐபேடு மற்றும் ரூ.2 லட்சம் பணம் லஞ்சமாக பெற்றதாக ராஜன் மீது சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இவற்றை ராஜன் வீட்டில் அவரது டிரைவர் வாங்கும் போது மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாய்ந்து சென்று கையும் களவுமாக பிடித்தனர். 

ராஜன் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் சுங்க இலாக்கா அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜன் சென்னையில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்பு வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் மத்திய அரசு துறைகளை சேர்ந்த பாஸ்போர்ட் அதிகாரி,தபால் அதிகாரி,இமிகிரேசன் அதிகாரி துறைமுக அதிகாரிகள் சி.பி.ஐ நடத்திய லஞ்ச வேட்டையில் சிக்கியுள்ளனர்.இதனையடுத்து சி.பி.ஐ பிடியில் சிக்கிய முக்கிய அதிகாரி ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.ராஜன் கைது குறித்து சி.பி.ஐ வட்டாரத்தில் கூறியதாவது:- சென்னையை சேர்ந்தவர் உபயதுல்லா, தொழிலதிபர்.இவர் வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக செல்போன்களை இறக்குமதி செய்து சென்னையில் விற்பனை செய்து வந்தார்.மொத்தமாக வியாபாரியான உபயதுல்லா தொழில் ்நிமித்தமாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவார்.  கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கம்போல் மொத்தமாக செல்போன்களை இறக்குமதி செய்தார் உபயதுல்லா. அப்போது, வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் ராஜனிடம் அவர் சிக்கிக் கொண்டார். அவர் மிறைகேடாக செல்போன்களை தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். உபயதுல்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து எப்படி விடுபடுவது முடங்கிய வங்கி கணக்கு செயல்படுத்துவது என தெரியாமல் உபயதுல்லா தவித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் ராஜன், உபயதுல்லா வழக்கில் இருந்து விடுபட பேரம் பேசினார்.ரூ.8 லட்சம் பேரம் பேசி முதல்கட்டமாக ரூ.2 லட்சம் பணமும், ஒரு ஐபேடும் தனக்கு லஞ்சமாக கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.இதுபற்றி உபயதுல்லா அளித்த புகாரின்பேரில் ரசாயன பவுடர் தடவிய நோட்டை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் உபயதுல்லாவிடம் கொடுத்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகில் உள்ள ராஜனின் வீட்டிற்கு உபயதுல்லா சென்றார். அங்கு தயாராக இருந்த ராஜனின் கார் ஓட்டுநர் முருகேசன் உபயதுல்லாவிடம் இருந்து ரூ.2.லட்சம் மற்றும் ஐ பேடை ராஜன் சார்பில் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ.அதிகாரிகள் கையும் களவுமாக அவரை பிடித்தனர். இவ்வாறு சி.பி.ஐ அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.கைதான வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் ராஜனுக்கு ஒருவரை காபிபோசா சட்டத்தில் அடைக்கும் அதிகாரம் உண்டு. ஆனால் ஊழல் செய்த சுங்க அதிகாரிகளை சி.பி.ஐ.யிடம் பிடித்துக் கொடுக்க உதவிய சிலரையும் இவர் வேண்டுமென்றே காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்ய முயன்றதாக வழக்குகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி சி.பி.ஐ தரப்பில் அவரது வீட்டை சோதனையிட்டதாகவும் அப்போது ரூ.11 லட்சம் மற்றும் 32 லட்சம் பிக்ஸட் டெபாசிட் ஆவணங்களும் சிக்கியதாக கூறப்பட்டது. தன்னை கைது செய்ததும் நீதிபதி அசன் அலியிடம் ஜாமீன் கேட்டு ராஜன் விண்ணப்பித்தார் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மார்ச் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago