முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களுக்கு ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சங்கரன்கோவில், மார்ச்8 - சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை நிரூபித்துக்காட்டுங்கள் என்று அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சங்கரன்கோவில் தொகுதியில் தலைவர்கள் முற்றுகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 14-ம்தேதி முதல்வர் ஜெயலலிதாவும், 15ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள். கழக பொருளாளரும் தமிழக நிதியமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் நேற்று இரவு குருக்கள் பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவர் வாக்கு சேகரித்து முடித்து விட்டு குருக்கள்பட்டி மெயின்ரோட்டில் பேசும்போது, தமிழக முதல்வர் மக்களுக்கு எவ்வளவோ நல்ல காரியங்களை செய்துள்ளார்கள். உலகமே வியக்கும் வண்ணம் முன்மாதிரி திட்டமான 1 கோடியே 85 லட்சம் கார்டுகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர், ஃபேன்களை வழங்கியுள்ளார். அது தவிர ஏழை எளிய கிராமப்புற வாழ்வாதாரமற்ற மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள், திருமணமாகும் பெண்களுக்கு உதவித்தொகை, மாணவ- மாணவியர்க்கு விலையில்லா மடிக்கணிணி உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பல மக்களுக்கு பலனுள்ள திட்டங்களை கொண்டு வர உள்ளார். அவரின் கரத்தை வலுப்படுத்த ஏற்கனவே சங்கரன்கோவில் தொகுதியை கடந்த 4 முறை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இனிமேலும் அந்த சாதனை தொடர இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேட்பாளர் முத்துசெல்விக்கு வாக்களியுங்கள் என்று பேசினார். 

இந்த பிரச்சார நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தர்மராஜ், ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ., தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா பாண்டியன், சங்கரலிங்கம், மேலநீலித நல்லுார் ஒன்றிய பெருந்தலைவர் முருகையா, துணை சேர்மன் மாரிச்செல்வி, மாநில பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன், கவுன்சிலர் ஜெயலட்சுமி, தடியாபுரம் டேனியல், மாடசாமி, மகாராஜன், செல்வம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்