முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகை வித்யாபாலன்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

புது டெல்லி, மார்ச்.8  - இந்த ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படங்களான வாகை சூடவா, ஆரண்ய காண்டம், அழகர்சாமியின் குதிரை ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. நடிகை வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.  59 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதில் தமிழில் 3 திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தமிழில் விமல், இனியா நடித்த வாகை சூடவா திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்த தமிழ் திரைப்படமான ஆரண்யகாண்டம் சிறந்த பட தொகுப்பிற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. இதற்கான விருதை அப்படத்தின் எடிட்டர் பிரவீண் பெற்றுக் கொள்கிறார். இதே போல் மற்றொரு தமிழ் படமான அழகர்சாமியின் குதிரை சிறந்த பொழுதுபோக்கு படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிறப்பாக நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ ஆம் என்ற படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை விவரித்த படமான டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்த நடிகை வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய நடிகர் கிரீஸ்குல்கர்னிக்கு அம்மாநில தியோல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் நடித்த பிரபலமான ரா ஒன் சிறந்த ஸ்பெஷல் எபெக்டுக்கான தொழில்நுட்ப விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான குறும்படம் என்ற பிரிவில் டிராப் ஆப் சன்சைன் என்ற குறும்படத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல ஆவண பட இயக்குனரான ஆனந்த் பட்வர்தன் இயக்கத்தில் உருவாகி உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கூறும் ஜெய்பீம் காம்ரேட் என்ற படத்திற்கு சிறந்த ஆவணப் படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்