முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் பலி

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

விருதுநகர், மார்ச். 8 - சிவகாசி வட்டம் சித்துராஜபுரம் அருகே நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். இதையறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு மருத்துவமனைக்கு சென்று பலியான மற்றும் படுகாயமடைந்தவரின் குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் கூறினார். சிவகாசி அய்யனார் காலனியைச் சோந்த கணபதி ஆசாரி(68) இவர் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகாசி சரஸ்வதிபாளையத்தைச் சேர்ந்த நடராஜன்(51) தீக்காயம் அடைந்து சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்று தீக்காயமடைந்த நடராஜனை நேரில் பார்வையிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி, அதற்குரிய ஏற்பாடுகளை விரைவாக செய்து மதுரைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார். அதுசமயம் நடராஜன் அவர்களின் மனைவி மற்றும் உறவினர்களை அழைத்து இதர செலவுகளுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து நிதியுதவி வழங்கினார். விபத்தில் மரணமடைந்த கணபதி ஆசாரியின் மனைவி காளியம்மாள், மகன்கள் மாரியப்பன், இராமச்சந்திரன், இராஜா ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவரின் ்ஈமக்கிரியை செலவிற்காக தனது சொந்த பணத்;தில் இருந்து நிதியுதவி வழங்கினார். முதல்வரின் பொதுநிவாரணநிதியில் இருந்து ரூபாய் ஒரு இலட்சம் உதவித் தொகை பெற்றுத்தர வேண்டிய ஏற்பாடுகளை செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் பிரேதப்பரிசோதனையை உடனடியாக முடித்து உரியவர்களிடம் உடலை ஒப்படைக்க அரசு மருத்துவமனை மருத்துவர்களை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்;வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன், சிவகாசி வட்டாட்சியர் இராமச்சந்திரன், தனி வட்டாட்சியர் (தீப்பெட்டிகள்) முனியசாமி உட்பட மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் பலரும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்