முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட கூடாது

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.9 - அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வதாக தமிழக அரசு முடிவு எடுத்து அரசு ஆணை வெளியிட்டது. இந்த நூலககட்டிடத்தில் குழந்தைகள் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கொண்டுவருவதாகவும், இங்குள்ள நூலகமானது  நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் கட்டப்படும் ஒருங்கிணைந்த அறிவுசார் ங்காவிற்கு மாற்றப்படும் என்றும் அரசு உத்தரவிட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புகழேந்தி, ஆர்.பிரபாகரன், மனோன்மணி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தடை விதித்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் பள்ளி, கல்வித்துறை செயலாளர் சபிதா பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் ங்கா கட்டப்பட உள்ளது. இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. அறிவுசார் ங்காவில் அமையவிருக்கும் நூலகத்தின் மூலம் இக்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பயன்பெற முடியும் மேலும் டி.பி.ஐ. வளாகம் நகரில் மத்தியில் அமைத்துள்ளது.

கோட்டூர்புரம் நூலகத்தை நகரில் உள்ள மொத்த கல்வி நிலையங்களில் 8 சதவீதம் கல்வி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வந்து செல்லும் வாசகர்களின் எண்ணிக்கை கன்னிமாரா நூலகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

மேலும், நகரில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளில் அமைந்துள்ளன. தென் சென்னை பகுதியில் அரசு மருத்துவமனை கிடையாது. ஆகவே, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் அரசு, குழந்தைகள் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற எடுத்த முடிவு சரியானதே! எம்.ஜி.ஆர். மருத்துவ பல் கலைக்கழகம் அருகில் இந்த மருத்துவமனை அமையப்பெறுவது பொருத்தமானது. அண்ணா நூற்றாண்டு நூலக இடம் மிகப்பெரியது. ஆனால், குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நூலகத்திற்கு உள்ளூர் நூலக நிதி எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நிர்வாகிக்க மாதந்தோறும் ரூ.50 லட்சம் செலவாகிறது. இந்த கட்டிடத்தை முழுவதுமாக பயன்படுத்தினால் மாதம் ரூ.1 கோடி செலவாகும். சென்னையில் உள்ள அரசு நூலங்களை நிறுவகிக்கவே மாதந்தோறும் ரூ.1 கோடி மட்டுமே செலவாகிறது. இந்த நூலக கட்டிடத்திற்கு இன்சூரன்ஸ் பிரீமியமாக ரூ.10 கோடி கட்டப்படுகிறது. அரசுக்கு இது வீண் செலவாகும். மொத்த பரப்பளவு 3 லட்சம் சத்து 48 ஆயிரத்தி 480 சதுர அடியில் வெறும் 41 ஆயிரத்து 700 சதுர அடி பரப்பளவு மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீதி இடப்பரப்பளவு  காலியாகவே உள்ளது.

நூலக கட்டிடத்தில் சம்பந்தம் இல்லாமல் பல அரங்குகள் கட்டப்பட்டுள்ளன. நூலக பயன்பாடு தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு இங்குள்ள கூட்டு அரங்குகள் பயன்படுத்தப்படுகிறது. இது வாசர்களுக்கு இடையூராக உள்ளது. இங்குள்ள உணவு விடுதிகளில் விற்கப்படும் திண்பட்டங்களின் விலை நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியானதாக இல்லை. இந்த நூலகம் கட்டியதில் தமிழ்நாடு நூலக சட்டம், தேசிய பொது நூலக சட்டம் ஆகியன வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது. நூலகத்தை இடமாற்றம் செய்வது என அரசு எடுத்த முடிவு, கொள்கை முடிவு .

ஆகவே, இதனை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் நீதித்துறை விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago