முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமையகத்தில் மகளிர் தினவிழா கோலாகலம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.9 - உலக மகளிர் தினவிழாவையொட்டி அ.தி.மு.க. தலைமையகத்தில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடினர். மகளிர் வாரியத்தலைவி சரஸ்வதி ரங்கசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். இதில் ஏராளமான மகளிர் கலந்துக் கொண்டனர்.  விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை ஒப்பிட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை சரஸ்வதி ரங்கசாமி படித்தார். தீர்மான விபரம் வருமாறு:-

மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என கருதும் மகத்தான தலைவி, மகளிர் அனைவரும் அவர்தம் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்ற சிந்தனை கொண்ட தலைவி, வாழும் மனித தெய்வம், இந்திய திருநாட்டின் எதிர்காலம், தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, மகளிர் சமுதாயம் நன்றியோடு நினைக்கும் நாள், இந்த உலக மகளிர் தின விழா.

தமிழக மகளிர் பயன்பெறும் வகையில், பல சலுகைகளை வாரி வழங்கி, மகளிர் முன்னேற்றத்திற்காக பல சாதனைகளை புரிந்து வரும் நம் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்கிற காலம் பெண்களுக்கு ஒரு பொற்காலம். அவர் சாதனைகளின் சிகரமானவர்.

1. பெண் சிசுக் கொலையினை தடுப்பதற்காக, அவர் எண்ணத்தில் உதித்திட்ட திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டு வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா. அன்னைதெரசாவே நேரில் வந்து முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டியது பெண்ணினத்திற்கே பெருமை.

2. மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதிலுள்ள சிரமத்தை அறிந்த மாண்புமிகு அம்மா அவர்கள், விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தைன முதன் முதலில் தொடங்கி வைத்தவர் நமது முதல்வர் ஜெயலலிதா.

3. இந்தியாவிலேயே முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தோற்றுவித்து, காவல் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர், நமது முதல்வர் ஜெயலலிதா.

4. தீயணைப்புதுறையில் பெண்களை நியமித்து மனித சமுகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கியவர் நமது முதல்வர் ஜெயலலிதா.

5. திருக்கோவில்களில் பெண் செயல் அலுவலர்களை நியமித்து, அறநிலையத்துறையில் புதிய வரலாறு படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

6. அச்சமும், மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்றார் புரட்சி கவிஞர். பெண்ணினம் பெருமை பெறும் விதத்தில், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத காவல் துறையில் பெண் கமாண்டோக்களை நியமித்து புரட்சி செய்தவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.

7. மாற்றும் தந்து மக்களுக்கு ஏற்றம் தருவேன் எனக் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கி மக்களின் பசியை போக்கியவர் நமது முதல்வர் ஜெயலலிதா.

8. வாழ்வாதாரம் ஏதுமின்றி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இயலாமல் உள்ள முதியர், உடல் ஊனமுற்றோர் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம் பெண்களுக்கு மாத உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தி அல்லல்படும் மக்களுக்கு உதவிக்கரம் அளித்தவர் முதல்வர் ஜெயலலிதா.

9. ஆடம்பரத் தேவைகள் கூட அத்தியாவசியத் தேவையாகிட்ட இன்றைய நவீன உலகத்தில் குடும்பத் தலைவிகளின் பளுவினை குறைக்கும் விதத்தில் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசறி வழங்கி அன்றாட வாழ்வில் பெண்களின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றியவர் முதலமைச்சர் முதல்வர் ஜெயலலிதா.

10. ஒரு குடிமகனுக்கு குடும்ப பெயராக தந்தையின் பெயரை மட்டும் குறிப்பிடுவது நடைமுறையில் இருந்து வந்த மரபு. அதை மாற்றி தந்தை பெயருடன் தாயின் பெயரையும் குறிப்பிடலாம் என ஆணையிட்டவர் நமது முதல்வர் ஜெயலலிதா.

11. பெண்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை காத்து வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா.

12. பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்ற வளாகத்தில் மகளிர் ஓய்வு அறையும், சட்டமன்ற விடுதியில் பெண்கள் உடல் நலன் கருதி மகளிருக்கென ஓர் உடற்பயிற்சி மையம் உருவாக்கி மகளிர் நலன் பேன வழி வகுத்தவர் நமது முதல்வர் ஜெயலலிதா.

13. ஏழைகள் தங்கள் சொந்தகாலில் நிற்கு வேண்டுமெனில் ஏழை, ஏளிய மக்களைப் பொருளாதார நடவடிக்கைளில் ஈடுபடச் செய்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தி ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்து அதுவும் பெண்களே பயனாளிகள் என அறிவித்து திட்டத்தினை உடன் நிறைவேற்றியவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.

14. தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் விலை ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு இலவச திருமணங்களை நடத்தி, அதில் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெறும் வகையில் திருமாங்கல்யம், பட்டம், பட்டயபடிப்பு முடித்திருப்பின் அவர்களுக்கு தங்ககாசும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கி ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றியவர் நம் முதல்வர் ஜெயலலிதா.

15. அறிவுசார் பெண்கள் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கதடையின்றி கல்வி கிடைக்க கல்வி உதவி தொகை மற்றும் மடிக்கணினி வழங்க மாணவிகளின் வாழ்க்கையில் முன்னேற வழி வகை செய்தவர் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான முதல்வர் ஜெயலலிதா தான்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்