முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் தேர்தல்: அதிமுகவுக்கு இ.யூ.மு.லீ ஆதரவு

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - சங்கரன்கோவிலில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பாடுபடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவரும், அகில இந்திய பொதுச்செயலாளருமான பாத்திமா முசாபர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிற 18ந் தேதி நடைபெற இருக்கிறது. இதுவரை அதிமுகவின் கோட்டையாகவும், காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த வீடாகவும் இருக்கும் இந்த தொகுதியில், அதிமுகவை தவிர திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டி போடுகின்றன.

ஆனால் வெல்லப்போவது முதல மைச்சர் அம்மாவின் அதிமுக வேட் பாளர் முத்துச்செல்வி என்பது தெளிவாகிவிட்ட விஷயமாகும். களத்தில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள், தற்போது தமிழகத்தில் நிலவும் மின் வெட்டையும், விலைவாசி உயர்வை காரணம் காட்டியும், தங்கள் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தியும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

மின்சார தட்டுப்பாடு என்பது இன்று திடீரென்று தோன்றிய பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை இப்போது தோற்றுவிக்கப்பட்டதும் அல்ல. முந்தைய திமுக அரசின் அலட்சிய போக்கினால்தான் தற்போது மின்வெட்டில் தமிழகம் தள்ளாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய மின் திட்டங் களை உருவாக்கினால், அதிலிருந்து மின்சாரம் பெற குறைந்தது மூன்று நான்கு ஆண்டுகள் ஆகும். அப்படி nullண்ட கால  தூரநோக்கோடு திட்டமிட்டு திமுக அரசு செயல்பட்டிருந்தால், தமிழகத்தில் இந்த மின் தட்டுப்பாடோ, மின்வெட்டோ ஏற்பட்டிருக்காது.

தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால், தமிழகத்தில் இன்னும் ஒருசில வாரங்களில் மின் தட்டுப்பாடு அறவே nullங்கும் வாய்ப்பு உள்ளது. விலைவாசியும், கட்டண உயர்வும் கால மாற்றத்தின் அவசியமாகத்தான் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பு, தொழில் முடக்கம் போன்றபொருளாதார சறுக்கல்கள், விலைவாசி உயர்வை நோக்கி தள்ளிவிடுகிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வாக்களித்துள்ளார். ஆகவே, எதிர்க்கட்சிகளின் வார்த்தை ஜாலங்களில் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்.முதல்வர் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தவுடன் வக்பு வாரியத்திற்கும், ஹஜ் கமிட்டிக்கும் நிதி ஒதுக்கீடு செய்ததோடு சென்ற வருடம் தமிழக ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்த்திப் பெற்றார்.

இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற பல நல்ல திட்டங்களை செய்துவரும் முதலமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதமாக உயர்த்து வேன் என்று வாக்களித்துள்ளார். மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களையும் மீட்டு தருவதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.

ஆகவே சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை மேலும் வலுவூட்டும் வகையில், அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு பாத்திமா முசாபர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago