முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் திமுக அமைச்சர் பரிதி வீடுகளில் சோதனை

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்-9-வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததாக வந்த புகாரை அடுத்து முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியின் வீடு, பினாமி மற்று உறவினர் வீடுகள் உட்பட 5 இடங்களில் லஞ்சஒழிப்பு போலிசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதுபற்றி விபரம் வருமாறு; கடந்த 2006முதல்2011 வரை தி.மு.க. ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர் பரிதிஇளம்வழுதி. இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பரிதிஇளம்வழுதி அமைச்சராக இருந்த 2006​ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2010​ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக தெரிய வந்தது.  அந்த சொத்துக்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டன. இதன் மூலம் பரிதிஇளம் வழுதி தன் பெயரிலும், தன் குடும்பத்தினர் பெயர்களில் ஒரு கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 745 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்திருப்பதாக தெரிய வந்தது. சென்னை நகரப் பிரிவு​4 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் ஊழல் தடுப்புச் சட்டம் 1988​ன்படி பரிதி இளம்வழுதி மீது குற்றப்பிரிவு 13(2) மற்றும் 13(1) (சி) ஆகியவை 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் இந்த  வழக்கில் பரிதிஇளம்வழுதியின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டியது அவசியம் என்று ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீர்மானித்தனர். இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள பரிதிஇளம்வழுதியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் பொன்னுசாமி தலைமையில் 50​க்கும் மேற்பட்ட போலீசார் காலை 7 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.   சென்னை  பாலவாக்கம் கஜீராகார்டன் முதல் தெருவில் உள்ள பரிதி இளம்வழுதி வீடு உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பரிதி இளம் வழுதி பாலவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். பரிதிஇளம்வழுதிக்கு அயனாவரம் சபாபதி தெருவில் (சென்னை மாநகராட்சி அலுவலகம் எதிரில்) அவரது மகன் வீடு உள்ளது. அங்கும் ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.  பரிதிஇளம்வழுதியின் தாய் இ.கண்ணம்மாள் வீடு திருவல்லிக்கேணி முனுசாமி நகரில் வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ளது. பரிதிஇளம்வழுதியின் இளைய சகோதரர் இளம் பாரதி என்ற துரையின் வீடு ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3​வது தளத்தில் உள்ளது. இந்த இரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.  பட்டினப்பாக்கம் லீத் கேஸ்டில் வடக்கு தெருவில் உள்ள எலிசபெத் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த 5 இடங்களிலும் நடந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.  பரிதிஇளம்வழுதி கடந்த ஆண்டு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் எழும்ர் தொகுதியில் போட்டியிட்டு தே.மு.தி.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவருக்கும் தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை குறை கூறி விமர்சித்த அவர், தி.மு.க. வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார்  வேறு எந்த கட்சியிலும் அவர் சேரவல்லை. அ.தி.மு.க. அல்லது ம.தி.மு.க.வில் அவர் சேரக்கூடும் என்று யுகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியான போதும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.      

பாலவாக்கம் கஜுரா கார்டனில் உள்ள பரிதி இளம்வழுதி வீட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள்.    10​க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரிதிஇளம்வழுதி வீட்டில் கணக்கில் வராத 320 கிராம் தங்க நகைகள் இருந்ததாக தெரிகிறது. அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நகைகளின் இன்றைய மதிப்பு ரூ. 8 லட்சத்து 36 ஆயிரத்து 480 ஆகும்.  இது தவிர கணக்கில் வராத 7 கிலோ வெள்ளி, ரூ. 1 1/2 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கணக்கில் வராத நகைகள், பணம் கைப்பற்றப்பட்ட போது, பரிதிஇளம்வழுதி பாலவாக்கம் வீட்டில்தான் இருந்தார். அவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கணக்கில் வராத நகைகள், பணம் குறித்து அவரிடம் ஊழல் தடுப்புபிரிவுபோலீசார்விசாரணைநடத்தினார்கள்.தி.மு.கஆட்சியில்அமைச்சர்களாக இருந்த பொன்முடி,துரைமுருகன்,தங்கம்தென்னரசு,கே.என்.நேரு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,கே.பி.பி.சாமி,உள்ளீட்ட பல அமைச்சர்கள் வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலிசாரின் சோதனைக்கு ஆளானது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்