முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிக்கெட் தொகையை கண்டக்டரிடம் வசூலிக்கக் தடை

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.9 - தொலைந்து போன பஸ் டிக்கெட் கட்டண தொகையை கண்டக்டரிடம் வசூலிக்க கூடாது என்று அரசு  போக்குவரத்து கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளைத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது: நான் கடந்த 2006​ம் ஆண்டு பணியில் இருந்த போது மேட்டுப்பாளையம்​மைசூர் இடையே சென்ற அரசு பஸ்சில் கண்டக்டராக இருந்தேன். அப்போது நான் வைத்திருந்த டிக்கெட்டுகள் தொலைந்து விட்டன. இதுபற்றி போக்குவரத்து கழகத்திலும் போலீசிலும் புகார் செய்தேன். போக்குவரத்து கழகம் பஸ் கட்டண தொகை ரூ.18 ஆயிரத்து 247​ஐ எனது சம்பளத்தில் பிடித்தம் செய்தது. தொழிற்சங்கம்​ போக்குவரத்து கழகம் இடையே செய்த 12​வது செட்டில்மென்ட் உடன்படிக்கையில் தொலைந்து போன டிக்கெட் பிரிண்டிங் செலவை மட்டுமே கண்டக்டரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த உடன்படிக்கைப்படி என்னிடம் சம்பளம் பிடித்தது தவறு. என்னிடம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்கும்படி போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த திபதி சந்துரு, 12​வது செட்டில் மென்ட் உடன்படிக்கைக்கு மாறாக தொலைந்து போன பஸ் டிக்கெட் கட்டண தொகையை கண்டக்டரிடம் வசூலித்தது தவறு. பஸ் டிக்கெட்டுகளை சட்டப்ர்வமாக டெண்டர் விட்டு அச்சடிப்பதில்லை. எனவே தொலைந்து போன பஸ் டிக்கெட் கட்டண பணத்தை கண்டக்டர்களிடம் இருந்து போக்குவரத்து கழகம் வசூலிக்க கூடாது. அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்த தொகையை திருப்பி ஒப்படைத்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம் ஆஜரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago