முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.9 - முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வநத்தது. எடுத்து பேசியபோது எதிர்முனையில் இருந்த நபர் போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீடு மற்றும் அதற்கு அருகில் உள்ள வீடு ஆகியவற்றில் குண்டு வெடிக்கப் போகிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

உடனே போலீசார் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சாவூரில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனே சென்னை போலீசார் தஞ்சாவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். எதிர்முனையில் இருந்த நபர் கொடுத்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது திருவொற்றியூரில் இருந்து ஒரு பெண் பேசினார். அவரிடம் விசாரித்த போது அவரது கணவர் தஞ்சாவூரில் இருப்பதாக தெரிவித்தார். உடனே தஞ்சாவூர் போலீசார் ஈஸ்வரி நகரில் வசிக்கும் ஜான் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒத்துக் கொண்டார்.அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனில் இருந்து கடைசியாக 108 ஆம்புலன்சுக்கு பேசியிருந்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது பற்றி ஜான் கூறியதாவது:

நான் எனது மனைவி அருள் உதயாவுடன் சென்னை திருவொற்றியூரில் வசித்து வருகிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் நான் தஞ்சாவூருக்கு சென்றேன். எனது மனைவி அருள் விஜயா. திருமணமான 3 வருடத்தில் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அவர் சென்னை திருவொற்றியூரில் ஒரு துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்பம் நடத்த வரும்படி பல முறை அழைத்தும் வர மறுத்துவிட்டார். நான் தனியாக தஞ்சாவூரில் வசிக்கிறேன். என்னை உதாசீனப்படுத்தும் என் மனைவியை ஏதாவது ஒரு வகையில் பழிவாங்க திட்டம் போட்டேன்.

எனது திட்டப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். அவர்களிடம் எனது மனைவியின் செல்போன் நம்பரையும் கொடுத்தேன். போலீசார் அந்த நம்பர் மூலம் எனது மனைவியை பிடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை பிடித்து விட்டார்கள். இவ்வாறு ஜான் கூறினார்., வெடிகுண்டு வதந்தியைப் பரப்பியதில் எனது மனைவிக்கும் தொடர்பு உள்ளது என்றார். இதையடுத்து போலீசார் அருள் உதயாவையும் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்