முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் 34 மூடை திமுக கரை வேட்டிகள் பறிமுதல்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சங்கரன்கோவில், மார்ச் 10 - சங்கரன்கோவிலில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த 34 மூடை திமுக கரை வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாயமான 16 மூடை வேட்டிகள் எங்கு சென்றது என்பது குறித்து தேர்தல் கமிஷன் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 18 ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் அனைத்துக்கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதற்கிடையே தேர்தல் கமிஷனும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக தொகுதி முழுவதும் செக்போஸ்ட்டுகள் அமைத்து சோதனை நடத்திவருகின்றனர். 

இதற்கிடையே நேற்று சங்கரன்கோவில் உள்ள நடராஜ விலாஸ் என்ற லாரி செட்டில் பறக்கும்படை தாசில்தார் உமா மகேஸ்வரி தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் லாரி செட்டில் இருந்த 34 மூட்டைகளை சோதனையிட்டபோது அதில் திமுக கரையுடன் வேட்டிகள் இருந்தன. இதையடுத்து விசாரணை நடத்தியபோது இது சங்கரன்கோவிலை சேர்ந்த ஆத்மாராவ் என்பவருக்கு வந்துள்ளதாகவும் இது மதுரையில் இருந்து டிகேபி என்ற பெயரில் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் 50 வேட்டி மூட்டைகள் வந்ததாகவும், இதில் 16 மூட்டைகள் மாயமாகிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த 16 மூட்டைகள் எங்கே சென்றது. திமுகவினரால் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதா என்று தேர்தல் கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. இதையடுத்து இந்த 34 மூட்டைகளையும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவினர் செய்ததைப்போலவே இப்போதும் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் திமுகவினர் இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து வாக்குகளை பெற்றது போல இந்தமுறையும் சங்கரன்கோவில் தொகுதியிலும் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்து வாக்காளர்களுக்கு வேட்டியை கொடுக்க கொண்டுவந்துள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்