முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறை கட்டிங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.10 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால் 76 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், காவல் துறை குடியிருப்புகள் மற்றும் இதர காவல்துறை கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக விளங்கும் காவலர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்; காவல்துறையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே தமிழக காவல் துறை முதன்மையான காவல் துறையாக செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழக முதலமைச்சர் எங்குமில்லாத வகையில் அனைத்து காவலர்களுக்கும் குடியிருப்புகள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் என்று முடிவெடுத்து உத்தரவிட்டார்கள்.  அதன் அடிப்படையில் கட்டுமானப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு பல இடங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால், சென்னை பெருநகர் ​ பெரியமேடு மற்றும் தாம்பரம்; காஞ்சிபுரம் மாவட்டம் ​ தாழாம்ர்; திருவள்ளூர் மாவட்டம் ​ ஆர்.கே. பேட்டை; வேலூர் மாவட்டம் ​ மேல்பட்டி, திருப்பத்தூர் வட்டம்; கடலூர் மாவட்டம் ​ புதுச்சத்திரம்; விழுப்புரம் மாவட்டம் ​ திருக்கோவிலூர், மணலூர்பேட்டை; கன்னியாகுமரி மாவட்டம் ​ பழுகல், பேச்சிப்பாறை; கிருஷ்ணகிரி மாவட்டம் ​ கந்தி குப்பம்; நாகப்பட்டினம் மாவட்டம் ​ திருக்குவளை; அரியலூர் மாவட்டம் ​ ஆண்டிமடம்; திண்டுக்கல் மாவட்டம் ​ சாமிநாதபுரம்; விருதுநகர் மாவட்டம் ​ சாத்தூர்; ராமநாதபுரம் மாவட்டம் ​ தனுஷ்கோடி; திருப்ர் மாவட்டம் ​ உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 7 கோடியே 27 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 18 காவல் நிலையங்கள்;

திருவள்ளூர் மாவட்டம் ​ திருவள்ளூர்; விழுப்புரம் மாவட்டம் ​ கோட்டை குப்பம் ஆகிய இடங்களில் 52 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; திருவள்ளூர் மாவட்டம் ​ ஆவடி; விழுப்புரம் மாவட்டம் ​ அனந்தபுரம், கஞ்சனூர்; கடலூர் மாவட்டம் ​ காடம்புலியூர்; திருவண்ணாமலை மாவட்டம் ​ சந்தவாசல், தெள்ளார், திருவண்ணாமலை; சேலம் மாவட்டம் ​ சேலம் ஆயுதப்படை; கிருஷ்ணகிரி மாவட்டம்​ ஓசூர், கிருஷ்ணகிரி; திருப்ர் மாவட்டம் திருப்ர்,  உடுமலைப்பேட்டை;  லகிரி மாவட்டம் பி1 நகரம் உதகை, குன்னூர்; கரூர் மாவட்டம் ​ வெள்ளியணை; புதுக்கோட்டை மாவட்டம் ​ கரம்பக்குடி, கந்தர்வக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் ​ வாய்மேடு, பொறையார்; திண்டுக்கல் மாவட்டம் ​ பழனி ஆகிய இடங்களில் 65 கோடியே 20 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1,016 காவலர் குடியிருப்புகள்;

திருவள்ளூர் மாவட்டம் ​ வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு பாசறை, ந்தமல்லி மதுவிலக்கு பிரிவு கட்டடம்; காஞ்சிபுரம் மாவட்டம் ​ உயர் பயிற்சியகத்தில் அருங்காட்சியகம் மற்றும் பரிசோதனைக் கூடம், ஆயுதப்படை வளாகக் கட்டடம்; விருதுநகர் மாவட்டம் ​ திருச்சுழி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு என 3 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல்துறை கட்டடங்கள், என மொத்தம் 76 கோடியே 84 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். இக்கட்டடங்களில் அடிப்படை வசதிகளுடன், சுற்றுப்புற சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல வசதிகளும், மழைநீர் சேகரிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளன.

ஆவடியில் காவலர்களுக்காக குடியிருப்புகளை திறந்து வைத்தமைக்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து  காவல்துறையில் பணிபுரியும் திரு. ராஜசேகரின் மனைவி  அருள்மொழி பேசியதாவது:​ முதல்வருக்கு வணக்கம். நாங்கள் இப்போது புதியதாக திறக்கப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் குடியிருக்க உள்ளோம்.  இக்குடியிருப்பில் சகல வசதிகளும் உள்ளன. இக்குடியிருப்பு மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால் என்னுடைய கணவர் அலுவலகம் போய்வர ரொம்ப வசதியாக இருக்கிறது. குடிர் ரொம்ப நன்றாக இருக்கிறது.  தரைப் பகுதி மற்றும் சமையலறை மிகவும் நன்றாக இருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago