முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயா கல்லூரி விவகாரம்: மு.க.அழகிரி வக்கீல் விளக்கம்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.10 - தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரம் தொடர்பாக மு.க.அழகிரியின் வக்கீல் நேற்று கலெக்டர் சகாயம் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி நீர்பாசன வாய்க்காலை அடைத்து கட்டப்பட்டுள்ளதாக அந்த பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ராமலிங்கத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் மு.க.அழகிரி நேரில் ஆஜராகாமல் இரண்டு முறை வக்கீல் மூலம் விளக்கம் அளித்தார்.

   இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக வக்கீல் ஜானிகி ராமுலு நேற்று கலெக்டர் முன்னிலையில் மு.க.அழகிரி சார்பில் ஆஜாரானார். அப்போது இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் நிலுவையில் உள்ளது. எனவே இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் கேட்டார். இதற்கு விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து இது தொடர்பாக விளக்கம் அளிக்க காலஅவகாசம் வழங்கியும், அடுத்தக்கட்ட விசாரணை குறித்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். இந்த விசாரணையின் போது கலெக்டருடன் கூடுதல் துணை கலெக்டர் பட்டாபிராமன், நில அளவை துறை இயக்குனர் மனோகரன், குண்டாறு என்ஜினீயர் முத்தையா, உசிலம்பட்டி ஆர்டிஓ புகழேந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago