முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட3 பேர் கைது

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.10 - மதுரையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை எஸ்எஸ் காலனியை சக்தி வேலம்மாள் தெருவில் உள்ள பரோடா வங்கி கிளையில் சிலதினங்களுக்கு முன்பு பின்புற கதவை உடைத்து அங்கிருந்த எல்சிடி மானிட்டர்கள், சிபுயு, ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வங்கியில் கிடைத்த கைரேகையையும், பழைய குற்றவாளிகளின் கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது கடந்த 2005ம் ஆண்டு கோச்சடை சாந்திநிகேதன் அபார்ட்மெண்டில் கொள்ளையடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட விராட்டிப்பத்தை சேர்ந்த சுரேசின் கை ரேகை ஒத்துப்போனது. இதை தொடர்ந்து சுரேஷ் குமாரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரோடா வங்கியில் கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

     அப்போது போலீஸ் விசாரணையில் வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கவே சென்றதாகவும் ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் கம்ப்யூட்டரை மட்டும் எடுத்து வந்ததாக சுரேஷ்குமார் தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அரசு ஊழியர் சாம் கிருபாகர், மும்மூர்த்தி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரிடமும் மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்