முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒபாமா - கர்சாய் உரையாடல்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 10 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் உரையாடல் நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி துறை அமைச்சர் ஜாய் கேமே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் உரையாடல் நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார் என்றார். குறிப்பாக இருநாட்டு உறவுகள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அம்சங்கள், ஆப்கானிஸ்தான் மறுகட்டுமானப் பணிகள் நல்லிணக்க நடவடிக்கைகள், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் ஜாய் கேமே தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தான் தலைமையிலான நல்லிணக்க நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்டுவரும் சமரச பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஒபாமாவிடம் கர்சாய் எடுத்துக்கூறியதாக தெரிகிறது. இரு நாடுகளும் பரஸ்பர பங்களிப்பை அளிப்பது எனவும் சிகாகோவில் நடக்க இருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டில் இரு நாடுகளும் கலந்துகொள்வது எனவும் இருநாட்டு அதிபர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் கேமே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்