முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி முதல் பட்ஜெட்: மேயர் தாக்கல் செயதார்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.13 - சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி நேற்று தாக்கல் செய்தார். 2012 - 2013-ம் ஆண்டுக்கான வரவு 1396 கோடி எனவும் செலவு 1392 கோடி எனவும்  கூறப்பட்டுள்ளது. இது பற்றி விபரம் வருமாறு:- சென்னை மாநகராட்சி கடந்த உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக அ.தி.மு.க பெரும்பன்மை பலத்துடன் கைப்பற்றியது. மேயராக சைதை துரைசாமி தேர்வு செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சியை அ.தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி நேற்று தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கையை நிலைக்குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார். 

நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்தார். 100 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் புத்தகத்தில் 50 பக்கங்களுக்கு நூறு அறிவிப்புகள் இருந்தது.

மனித நேய தன்மை கொண்ட மேயர் துரைசாமியின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் மனித நேய தன்மையுடன் பட்ஜெட் இருந்தது. பட்ஜெட்டில் 2012-ம் ஆண்டு வருவாய் ரூ.1396.63 கோடியாகவும் செலவு ரூ.1392.68  கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக ரூ.4 கோடி உபரி தொகையுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை மேயர் வெளியிட்டுள்ளார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குருப்-1 மற்றும் அகில இந்திய பொறியியல் மருத்துவம் போன்ற பணிகளுக்கு தேர்வு எழுதும் வகையில் அவர்களை தயார்படுத்த சிறப்பு அடிப்படை பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் நேர்த்தியாக பேசும் வகையில் தயார் படுத்திட 6,7,8,ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் பேசும் பயிற்சி அளிக்கப்படும். அனைத்தும்  பள்ளிகளிலும் நூலகங்கள் புனரமைக்கப்படும். பள்ளிகளில் தூயகுடிநீர் கிடைக்க வழிசெய்தல் பள்ளிகளில் கழிவரைகள் புதுப்பிக்கப்பட்டு பராமரிப்பது ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்தவுடன் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்துவது, 30 பள்ளிகளுக்கும் இசைப்பயிற்சி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும்  விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், நூறு தொடக்க பள்ளிகளில் விளையாட்டு மையங்கள் ஏற்படுத்துதல் மாணவர்களுக்கு புதிய சுதாதார அட்டை வழங்குதல் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 மேனிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த ஒலி-காணொளி வடிவமைப்பு உருவாக்கப்படும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான தனி பாடத்திட்டங்கள் உருவாக்குவது போன்ற அதிரடியான 29 அறிவிப்புகளை கல்விக்காக மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதே போல் விரிவாக்கம் செய்யப்பட்டு சென்னை யோடு இணைக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செய்ததும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் கூறப்பட்டிருந்தது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 4 மகப்போது மையங்களை புதுப்பிப்பது எனவும் இரண்டு புதிய மகப்பேறு மையங்களை நிறுவுவது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மண்டல, வார்டு, பகுதி, அலுவலகங்கள் அமைக்கவும் 7 பாலங்கள் புதிதாக அமைக்கவும் மேலும் 7 புதிய பாலங்கள் அமைக்கவும் வழிகாணவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சூழல் விளக்குகள் பொறுத்தப்பட்ட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள மணலி பகுதியை சி.எம்.டி.ஏ.விலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என கூறப்பட்டுள்ளது.

சாலைகள் மேம்பாட்டிற்க்காக 15 மண்டலங்களிலும் உட்புற தார்சாலைகள், பேருந்து சாலைகள் அமைக்க ரூ.581 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளின் தரத்தை மேம்படுத்த வல்லூநர் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஐந்தாயிரம் மழைநீர் வடிகால் நுழைவாய்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்க தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பசுமையாக்க முதற்கட்டமாக நூறு பூங்காக்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இவைகளில் மூலிகை இன தாவரங்கள் பயிரிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கொசுத்தொல்லையை போக்க  ஆகாயதாமரைகளை அழிக்கும் வகையில் நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனம் வாங்கப்படஉள்ளது. 3 கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி முறையில் கொசுக்களை ஒழிக்க ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்பட உள்ளது.

தெருநாய்களை பாதுகாக்க நாய்கள் காப்பகம் அமைத்து முதல்கட்டமாக தெருவில்  சுற்றிதிரியும் 2 ஆயிரம் நாய்கள் அப்புறப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளத இதே போல் எலித்தொல்லையை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போல் கட்டிடம் கட்டுபவர்கள் கட்டிடவரை பட அனுமதி பெறுவதை எளிதாக்கும் விதத்தில்  எல்லா நடைமுறைகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

மாநகராட்சி சொத்து வருவாயை சீரமைக்க கடந்த ஆட்சியில் இருந்த சீர்கேடுகளை களைந்து சிறப்பு வகை கட்டங்களான திரையரங்குகள், திருமண கூடங்கள், தனியார் மருத்துவ மனைகள் போன்றவைகள் உள்ளது போல் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற் கூடங்களையும் எந்த இனங்களில் கொண்டு வருவது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் மண்டல தலைவர்கள் உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.  முடிவில் பட்ஜெட் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்