முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

திண்டுக்கல், மார்ச்.13 - மதுரையைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவர் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 3 பேர்களைப் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் கதிரவன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று மதியம் சுமார் 12 மணியளவில் மதுரை -ராமநாதபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது ஒரு மர்மக் கும்பல் அவரைக் கடத்திச் சென்றது. பின்னர் ரூ.2 கோடி கேட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் அக்கும்பல் மிரட்டியுள்ளனர். பின்னர் அன்றிரவே சுமார் 8 மணியளவில் மதுரை ஏர்போர்ட் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கதிரவனை தூக்கி வீசிச் சென்று விட்டனர். படுகாயம் அடைந்த கதிரவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் அவர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்காமலேயே  இருந்துள்ளார்.  இதுகுறித்து அவர் தி.மு.க. தலைமையிடம் தனது கட்சியிலேயே தனக்கு எதிராக தீர்த்துக்கட்டவும் சதி நடப்பதாக கூறியுள்ளார். கட்சி தலைமை கூறியதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை கமிஷனர் உத்தரவின் பேரில் திருநகர் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அக்கடத்தல் கும்பல் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலுள்ள சுகன்யா லாட்ஜில் தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையைச் சேர்ந்த 25 போலீசார்  நேற்று இரவு சுமார் 7.20 மணியளவில் லாட்ஜை சுற்றி வளைத்தனர். 

இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் சில போலீசார் லாட்ஜூக்குள் நுழைந்து அவர்கள் தங்கியிருந்த முதல் தளத்தில்  101, 111 எண் கொண்ட அறையை தட்டினார். கதவைத் திறந்தவுடன் போலீசார் கண்டதும் திகைத்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் தாக்க முற்பட்டனர். மேலும் அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனின் கழுத்தை நெறித்துக் கீழே தள்ளி அவரைக் கொலை செய்ய முயன்றார். தற்பாதுகாப்புக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து  அவனது இடது தோள்பட்டையை நோக்கி சுட்டார். அதில் நிலை குலைந்த அவன் தலைக்குப்புறக் கீழே விழுந்தான். இதனைப் பார்த்த அறையில் இருந்த 4 பேர்கள் தப்பியோட ஆரம்பித்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் லாட்ஜை சுற்றியிருந்த போலீசார் மளமளவென்று லாட்ஜூக்குள் ஏறினர்.

தப்பியோட முயன்ற மற்ற 4 பேர்கள் லாட்ஜில் இருந்து கீழே இறங்கி ஓட முயன்ற போது போலீசார் மடக்கினர். அதில் ஒருவர் மட்டும் தப்பியோடினர். மற்ற மூவரும் பிடிட்டனர். பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்த வாலிபரையும் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனையும் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அந்த வாலிபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனத் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கைது செய்யப்பட்ட மற்ற மூவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பலியான வாலிபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினோஜ்(35) என்பதும், கைதான மூவரும் தப்பியோடிய ஒருவரும் என அனைவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே  நடைபெற்றதால் அப்பகுதி முழுவதும் திடீரென பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் அரசு மருத்துவமனையிலும் ஏராளமானோர் கூடினர். திண்டுக்கல் டவுன் டி.எஸ்.பி. சுருளிவேல் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago