முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா கைது செய்யப்படுவாரா? புத்ததேவ் பேட்டி

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மார்ச்.24 - தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி கைது செய்யப்படமாட்டார் என்று மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்காளத்தில் உள்ள கசேரிமூர் என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் போலீசார் தடியடி நடத்தினர். மேலும் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரச்பால் காயம் அடைந்தார். இந்த கலவரம் தொடர்பான வழக்கில் தற்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜியும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மேற்குவங்க மாநிலத்தில் 6 கட்டமாக நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தலைமையில் ஒரு குழு வந்ததுள்ளது. அந்த குழுவிடம் மேற்குவங்க மாநில இடது கம்யூனிஸ்ட் சார்பாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கசேரிமூர் கலவரத்தில் தொடர்புள்ள அனைவருக்கும் தேர்தல் கமிஷன் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் இது குறித்து நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் புத்ததேவ்விடம் கேட்கப்பட்டதோடு மம்தா பானர்ஜி கைது செய்யப்படுவாரா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த புத்ததேவ், தேர்தலுக்கு முன்பு மம்தா பானர்ஜி கைது செய்யப்படமாட்டார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்