முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழிலக கட்டிடம்: முதல்​வரிடம் நிபுணர் குழு அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 14 - எரிந்து நாசமான எழிலகம் கட்டிடத்தை இடித்து விட்டு பழமை மாறாமல் புதிதாக கட்டலாம் என முதல்​அமைச்சரிடம் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. சென்னை எழிலகம் வளாகத்தில் 150 ஆண்டு பழமையான கட்டிடம் பொங்கல் தினத்தில் எரிந்து நாசமானது. அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகமும், தொழில் வணிக இயக்குனர் அலுவலகமும் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களும் கம்ப்யூட்டரும் எரிந்து விட்டன. இதனால் அந்த இரண்டு இயக்குனர் அலுவலக பணிகளும் பாதித்தன. மாநிலம் முழுவதும் உள்ள எல்லா புள்ளி விவரங்களும், திட்ட, செயலாக்க பணிகள் குறித்த ஆவணங்கள், அனைத்தும் எரிந்து நாசமாயின. பாதிக்கப்பட்ட 2 அலுவலகங்களும் தற்காலிகமாக வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. தீ விபத்தில் சேதம் அடைந்த கட்டிடத்தின் தன்மையை, ஆய்வு செய்ய 5 பேர் குழுவை முதல்​அமைச்சர் ஜெயலலிதா நியமித்தார்.

அந்த குழு பழமையான அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அந்த கட்டிடம் எந்த ஆண்டில் கட்டப்பட்டது. அதனுடைய ஆயுட்காலம் குறித்து ஆய்வு செய்த அவர்கள் சேதம் அடைந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. அவற்றை இடிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தனர். 

150 ஆண்டு பழமை வாய்ந்த அந்த கட்டிடம் இனி பயன்பாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை. அவற்றை இடித்து விட்டு அதே போன்று புதிய கட்டிடம் கட்டலாம். தற்போது உள்ள கட்டிடம் போலவே அதில் உள்ள கட்டிடக்கலை, பழமை மாறாமல் கட்டலாம் என நிபுணர் குழு அறிக்கை கொடுத்துள்ளது. முதல்​அமைச்சர் ஜெயலலிதாவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய கட்டிடம் கட்டுவதற்கான மதிப்பீடு தயாரிக்கப்படும். பாரம்பரியமிக்க கட்டிடங்களை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழிலகம் வளாகத்தில் எரிந்த சேதமான அந்த கட்டிடத்தை புதுப்பிக்காமல் அவற்றை அகற்றி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்தவுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிகளை தொடங்க இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago