முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 15 -   இலங்கை தமிழர் விவகாரத்தில் பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். சங்கரன்கோவில் பிரச்சாரத்திற்கு புறப்படும் முன் சென்னையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- 

கேள்வி:​பிரதமர் உங்களுக்கு எழுதியுள்ள பதில் கடிதம் திருப்தி அளிக்கிறதா? 

பதில்:​ இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமருக்கு 2 கடிதங்கள் எழுதி இருந்தேன். அதற்கு பிரதமர் எழுதிய பதில் கடிதம் எனக்கு கிடைத்தது. அவரது பதிலில் திருப்தி இல்லை. உறுதியான எந்த நிலைப்பாடும் எடுத்ததாக அவரது கடிதத்தில் இல்லை. எனவே ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன். 

கேள்வி:​சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? 

பதில்:​சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். 

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago