முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக வேட்பாளர் மீது முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.15 - முன்னாள் அமைச்சர் அருணாசலத்திற்கு சொந்தமான நிலத்தை போலி உயில்பத்திரம் மூலம் அபகரித்தவரே திமுக வேட்பாளர் என்றும், அவர்மீது அருணாசலத்தின் மனைவியே மோசடி புகார் தந்துள்ளார் என்றும் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டியுள்ளார். சங்கரன் கோவில் அதிமுக முத்துச்செல்வியை ஆதரித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா அப்போது அவர் பேசியதாவது:- 

இந்த இடைத் தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் அண்ணன் மகன் ஆவார்.  இந்த தி.மு.க. வேட்பாளர்  அருணாசலத்திற்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலத்தை போலி உயில் பத்திரத்தின் மூலம் அபகரித்துவிட்டார் என்றும்; இதன் மூலம் 11 லட்சம் ரூபாய் அளவுக்கு அவர் லாபம் அடைந்து இருக்கிறார் என்றும்;  அருணாசலம் மனைவியே காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கிறார்.  இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால் இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.  இது தான் தி.மு.க. வேட்பாளரின் லட்சணம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் குடும்பத்தை ஏமாற்றியவரை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. உண்மையான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், நிச்சயம் இவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.  இப்படிப்பட்ட ஒரு நபரை கருணாநிதி வேட்பாளராக நிறுத்தி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நில அபகரிப்பாளர்களை ஊக்குவித்தவரே கருணாநிதி தான் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள்.  உங்களின் ஆதரவோடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நான் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளின் படி,  நில அபகரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.  இதுவரை 1190 நில ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டு 724 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago