முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபாகரன் மகன் கொலை காட்சிகளை வெளியிட்டது சேனல் 4

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். 16 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ காட்சிகளை இங்கிலாந்தின் சேனல் 4 டி.வி. நேற்று வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இலங்கையில் நடந்த போரில் 2009 ம் ஆண்டு மே மாதம் இலங்கை தமிழர்கள் மீது ராணுவம் கடுமையான வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. சிறார்கள், பெண்கள் நிர்வாணமாக்கி சுடப்பட்டனர். பலரும் சித்ரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என்று தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. காணாமல் போனவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கை தொட்டது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஆண்டு இலங்கை கொலைக்களம் என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பியது. 

இதில் அங்கு நடந்த பச்சை படுகொலைகள் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றன. அதில் மேலும் சில காட்சிகளை சேர்த்து இலங்கை போர்க்களம், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப்பில் மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டது. நெஞ்சை பதற வைக்கும் கொடூர காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன. விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலசந்திரனை கொடூரமாக கொன்றது. ஏற்கனவே உடல் சிதைந்து, முகம் கருகி, கை, கால்கள் உடைந்து புதுமாத்தளையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் மீது குண்டு வீசி மருத்துவமனையை முற்றிலும் தகர்த்து தரைமட்டமாக்கியது. அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்தவர்களை வஞ்சகமாக கொன்று குவித்தது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து அளிக்காமல் பரிதாபமாக சாக விட்டது உள்ளிட்ட காட்சிகள் இதில் இடம் பெற்றன. இந்திய நேரப்படி நேற்று காலை 4.30 மணிக்கு இந்த காட்சிகள் ஒளிபரப்பட்டன. இந்த வீடியோ ஆதாரம் வெளியானதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் வீடியோ வெளியானது இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையில் அரசு ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கொழும்பில் நடந்த பேரணியில் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பேசிய வீட்டு வசதி துறை அமைச்சர் வீரவன்சா குளிர்பானங்கள், கூகுள் நிறுவனத்தின் இ மெயில் சேவை உட்பட அமெரிக்க தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணியுங்கள். சண்டையிட அமெரிக்கா விரும்பினால் நாமும் தயாராவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago