முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியா கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு

சனிக்கிழமை, 17 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.17 - சிறையில், தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள மூன்று நைஜீரியா கைதிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி, இவர் சிறை கைதிகளின் உரிமை மையத்தின் இயக்குநர் இவர் சமீபத்தில் சிறைக்கு சென்றுள்ளார். அங்கு விசாரணை கைதிகளாக உள்ள 3 நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் காயம்பட்டிருந்தை கண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் சமீபத்தில் புழல் சிறைக்கு சென்றேன் அப்பொழுது நைஜீரியா நாட்டை சேர்ந்த 3 பேரை சிறை வார்டன்கள் தாக்கி காயப்படுத்தியதாக அவர்கள் கூறினர் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. நேரில் கண்டி நிகழ்வை வைத்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். இது வரையில் அவர்களுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கபடாமல் இருப்பதால் மிகுந்த மன உளச்சலில் அவர்கள் இருக்கின்றனர் மேலும் அவர்களை தாக்கிய சிறை வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மோகன்ராம் மற்றும் நீதிபதி அக்பர் அலி முன்பு வந்த போது. நீதிபதிகள் பாதிக்கப்பட்ட 3 நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு இன்றே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த மருத்துவத்தின் நிலமையை அறிக்கையாக வரும் செவ்வாய் கிழமைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார் மேலும் சிறை துறை அதிகாரியை விளக்கம் கேட்டு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்