முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்க தி.மு.க. அரசு திட்டம்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மார்ச்.24 - தமிழகத்தில் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்க தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அவதிப்படும் மக்கள் இதனால் மேலும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் 2006 ம் ஆண்டு முதல் தற்போது வரை மக்கள் பலவகையிலும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். எந்த வகையிலாவது நிம்மதியுடன் தமிழக மக்கள் வாழ்கிறார்களா என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த ஆட்சியில் மக்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களில் உச்சபட்சமானது மின்வெட்டுதான். பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நெசவு தொழில் விவசாயம் என அனைத்து வகையிலும் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மின்வெட்டை குறைப்பதற்கு தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

கடந்த 4 ஆண்டுகளாக மழையில்லை, சரியான காற்று இல்லை, தண்ணீர் இல்லை, அதனால் மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என கருணாநிதியும், இருட்டு அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும் கூறி வந்தனர். ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இயற்கையின் கொடையாக தேவைக்கு அதிகமான மழை கொட்டியது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகள், குளங்கள், கண்மாய்கள் என நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி விட்டன. போதுமான தண்ணீர் கிடைத்தும் தி.மு.க அரசு மின் உற்பத்தியை சீர்படுத்தவும், மின் உற்பத்தி நிலையங்களை பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவில்லை. அப்படி பராமரித்திருந்தால் தற்போது மின்வெட்டே இருந்திருக்காது. மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை கருணாநிதி அரசு மேற்கொள்ளாததால் இன்றும் தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில் தமிழக மின் உற்பத்தி ஏற்கனவே குறைந்து விட்டதால் இந்த மின்வெட்டு நிலை தொடர்கிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு தற்போது கிடைத்து வரும் மின்சாரத்தின் அளவு மேலும் குறையவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில்  ஏற்கனவே உள்ள மின்வெட்டுடன் சேர்த்து தினம் கூடுதலாக அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை மின்வெட்டை அதிகரிக்க தி.மு.க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இரண்டு மணி நேரம் அமலில் உள்ளது. இது தவிர மறைமுக மின்வெட்டு என தினம் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்கிறது. இந்நிலையில் மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமே ஆனால் தினம் 5 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதனால் தொழில் நிறுவனங்கள், உற்பத்தி பாதிக்கப்படுவதோடு பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்படும். தொழில் துறையில் இந்த நிலை ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கியும், மக்களுக்கு மிகப் பெரிய இன்னல்களை ஏற்படுத்தவுள்ளது. தி.மு.க. அரசு மின் உற்பத்தியை அதிகரிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்கு காட்டிய அக்கறையை தற்போதைய தி.மு.க. ஆட்சி அலட்சியப்படுத்தி விட்டது. இதனால் தமிழக மக்கள், தொழில் அதிபர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்