முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தர தண்ணீர்

புதன்கிழமை, 21 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 21 - மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக 9 இடங்களில் களிமண்எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது. மீனாட்சி அம்மன்கோவிலில் நவீன முறையில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைக்க நிபுணர்கள் குழு வந்து ஆய்வு செய்தது. பின்னர் திட்ட அறிக்கையின் படி ரூ.25 லட்சம் செலவில் நவீன முறையில் குளத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணி கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. இப்பணி சென்னை ஐ.டி.டி. பேராசிரியர் ரவீந்திரன் கெட்ஜூ ஆலோசனையில் பேரில் நடைபெற்று வருகிறது.  முதல் கட்டமாக குளத்தின் தரை தளத்தில் பூசப்பட்ட சிமெண்டுகள் அகற்றப்பட்டு உலோக விரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த உலோக விரிப்புக்கு மேல் களிமணி, மணல் போட்டு மூடப்படும். இப்படி செய்வதன் மூலம் குளத்தில் நிரப்பப்படும் தண்ணீரின் அளவு குறையாமல் இருக்கும். இதற்காக தண்ணீர் உறிஞ்சாத களிமண் ரகங்களை கண்டறிந்து வருகிறார்கள். செக்கானூரணி உள்பட 9 இடங்களில் களிமண் தோண்டி எடுக்கப்பட்டு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எந்த வகை களிமண் தரமாக உள்ளதோ அந்த களிமண்ணை பொற்றாமரை குளத்தில் நிரப்பி தண்ணீர் தேக்கப்பட்டு தாமரைகளும் வளர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்